பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ம் தேதி வெளியாகி உலகமெங்கும் வெற்றி நடைபோடுகிறது. கேஜிஎப் 2 ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகியது. இவ்விரு படத்திற்கும் போட்டி இருந்தாலும் சமூக வலைதளங்களில் பீஸ்ட் சரியில்லை என்று புரளிகளும் வந்து கொண்டு இருக்கும் வேலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பீஸ்ட் படக்குழுவினருக்கு விஜய் அவர் வீட்டில் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பீஸ்டின் சூட்டிங்கின் போது தான் நடிகர் ரஜினியிடம் பீஸ்ட் பட இயக்குனரான நெல்சன் தலைவர் 169 படத்திற்க்கான் கதையை கூறியுள்ளார். ரஜினியும் ஓகே என்று கூறியுள்ளார். அக்கதை நடிகர் விஜய்க்கும் தெரியும் என தெரிகிறது. அதானால் நடிகர் விஜய் அவரது விருந்தில் இயக்குனர் நெல்சனுக்கு ஆல் தி பெஸ்ட் என்று கூறி மகிழ்ச்சி அளித்துள்ளார்.

ஆகவே, பீஸ்ட் படக்குழுவினர்களான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இசை அனிருத் என அக்குழுவினர் தலைவர் 169 படத்திற்கும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்கவைக்க பேசிவருகின்றனர். அவர் தவிர பிரியங்கா மோகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
விஜய். நெல்சன், மனோஜ் பரமஹம்சா, பூஜா ஹெக்டே, அனிருத் உட்பட பலர் இந்த விருந்தில் பங்கேற்றனர்.