விஜய் ஹசாரே கோப்பை: இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா அணியின் சார்பாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் இரட்டை சதம் விளாசியதுடன் ஓரு ஓவரில் 7 சிக்சர்களை விளாசி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ருத்ராஜ் கெய்க்வாட் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர். கடந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி வந்த ருத்ராஜ் அதற்கு முந்தய போட்டியில் ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான விருதை பெற்றிருந்தார். இந்நிலையில், மீண்டும் பேட்டிங்கில் அதிரடி காட்டத் துவங்கியுள்ளார்.
தற்போது, இந்தியாவில் 50 ஓவர்கள் கொண்ட விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ வீரரான நாராயணன் ஜெகதீசன் தன் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல உலக சாதனைகளை முறியடித்தார். இவர் இந்த தொடரில் தொடர்ந்து 5 வது சதத்தை பதிவு செய்தார். இதுவரை நடந்த போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்கள் மட்டுமே பதிவு செய்ததிருந்தனர். அந்த பதிவை மாற்றி முதன் முதலாக 5 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை ஜெகதீசன் பெற்றார்.

அதுபோல இந்த தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் ருத்ராஜ். இன்று நடந்த காலிறுதி போட்டியில் உத்திரபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா வீரர் ருத்ராஜ் புதிய சாதனை படைத்தார். இதில் முதலில் களம் இறங்கிய உத்திரபிரதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களை எடுத்தது.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய மகாராஷ்டிரா அணி வீரரான ருதுராஜ் இரட்டை சதங்களை பதிவு செய்தார். குறிப்பாக 50 வது ஓவர் வீசிய சிவா சிங் வீசிய அனைத்து பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். இவர் வீசிய நோ பாலையும் சேர்த்து 7 சிகசர்களை பறக்க விட்டு அரங்கை அதிரவைத்துள்ளார். அது மட்டும் அல்லாது ஓரு ஓவரில் 7 சிக்சர் பறக்கவிட்டு புதிய சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்: இந்திய ஓலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக பி.டி.உஷா நியமனம்
இது போன்ற தகவலுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.