விஜய் லோகேஷ் கனகராஜூடன் இணையும் பிரபல இயக்குனர்

0
5

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருவிழாவிற்கு உலகமெங்கும் வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீ்ட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. 

திரளான ரசிகர்கள் மத்தியில் தோன்றி ரசிகர்களுடன் சிரித்து பேசி அவர்களுடன் செல்பி எடுத்து அன்பை பரிமாறிய நடிகர் விஜய். தனக்கே உரிய பாணியில் குட்டி ஸ்டோரி சொல்லி ரசிகர்களை கவர்ந்தார். அது தற்போது வரை டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த படத்தில் ராஷிகாமந்தனா, யோகிபாபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த திரைப்படம். இந்நிலையில், இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியானதன் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளார் விஜய். இவர்கள் இதற்கு முன்னர் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து உருவாக்கினர். இப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய் லோகேஷ் கனகராஜூடன் இணையும் பிரபல இயக்குனர்

இந்த நிலையில் இப்படம் லோகேஷின் சினிமாட்ரிக் மெத்தடில் அமைந்து நல்ல திரைப்படமாக இருக்கப் போகிறது என்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஓப்புதல் ஆகியுள்ளதை ஓரு தனியார் நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்ட போது ஓப்புக் கொண்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படமான ’தளபதி 67 படத்தில் சஞ்சய் தத் கௌதம் மேனன் நிவின் பாலி அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: அவதார் 2 பத்து நாட்களில் 7000 கோடி வசூலித்து உள்ளது

இருப்பினும் படக்குழுவினர் இந்த படத்தில் இன்னும் யார் யார் நடிக்கின்றனர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here