விஜய் சேதுபதி: சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கூறியதாவது. பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் பற்றி சந்தோஷமோ, கவலையோ அது தயாரிப்பாளர்களை சார்ந்தது. அதில் ரசிகர்கள் விவாதம் செய்வது வருத்தம் தருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நான் நடித்த படங்களை நானே பார்ப்பது இல்லை. எனது நடிப்பு எனக்கு பிடிக்காததுதான் அதற்கு காரணம். நான் நடித்த ஒரு காட்சியை பார்க்கும்போது இதில் இன்னமும் நன்றாக செய்திருக்க வேண்டும் என்று தோன்றும். ‘மாஸ்டர்’ படம் பார்க்க தியேட்டருக்கு போய்விட்டேன். ஆனால் முழு படமும் பார்க்காமல் வந்தேன். அந்த அளவுக்கு எனது நடிப்பை பார்க்க எனக்கே ஒரு மாதிரியாக இருக்கும்.
சினிமா என்பது வலுவான மீடியா. வெறும் பணத்துக்காக நான் நடிக்கவில்லை. நெறிமுறைகளை சொல்லும் படத்தின் கதைகளுக்கு முன்னுரிமை தருகிறேன். எனது அப்பாவை மனதில் வைத்துதான் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு கதை எழுதி நடித்தேன். எனது குடும்பத்தாருக்கே அந்த படம் பிடிக்கவில்லை. ஆனால் படம் வெளியாகி சில ஆண்டுகளுக்கு பிறகு அது நல்ல படம் என்கிறார்கள். ஒரு படம் வெளியாகும் சமயத்தில் ஓடாமல் போனாலும் அது நல்ல படமாக இருந்தால் வெளியில் தெரிந்தே ஆகும். அதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து ரசிகர்கள் எந்த கவலையும் கொள்ள வேண்டாம் என்று அவர் கூறினார்.