ஃபார்ஸி: விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர், கே.கே.மேனன், ராசி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா, புவன் அரோரா இணைந்து நடித்துள்ள வெப் தொடர்தான் ஃபார்ஸி. இதை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ளனர். க்ரைம் த்ரில்லர் கொண்ட இந்த வெப்தொடர் வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் மற்றும் வெவ்வேறு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு 240க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்படுகிறது. ‘தி பேமிலி மேன்’ என்ற வெப்தொடரை இயக்கிய ராஜ், டிகே ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான டி2ஆர் பிலம்ஸின் மேற்பார்வையில் இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வெப் தொடரில் 8 எபிசோடுகள் இடம் பெறுகிறது. பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்புக்கு நல்ல பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் புத்திசாலித்தனமான தெருக்கலைஞனை மையப்படுத்தி இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. சீதா ஆர்.மேனன், சுமன் குமார் ஆகியோருடன் ராஜ் மற்றும் டிகேயும் இணைந்து ‘ஃபார்ஸி’ ஸ்கிரிப்ட்டை எழுதியுள்ளனர்.