அரண்மனை 4: சுந்தர்.சி இயக்கத்தில் வினய், ஹன்சிகா நடித்த படம் ‘அரண்மனை’. இந்த படம் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகம் அரண்மனை 2 பெயரில் உருவானது. இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா உட்பட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அரண்மனை 3 படம் வெளியாகியது. இதில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராசிகண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை உருவாக்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார். முதல் மூன்று பாகத்திலும் இரண்டாவது ஹீரோவாக சுந்தர்.சி நடித்திருந்தார். அதே போல் 4வது பாகத்திலும் அவர் நடிக்க முடிவு செய்தார்.
அதே சமயம் மூன்று பாகங்களிலும் வெவ்வேறு ஹீரோக்கள் நடித்ததால் இதில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க சுந்தர்.சி திட்டமிட்டார். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்நிலையில் படத்துக்கான கால்ஷீட் தேதிகள் ஒதுக்கும் பேச்சு வந்தபோது அரண்மனை 4ம் பாகத்துக்கு கேட்ட தேதிகளில் வேறு படத்தில் நடிப்பதால் இதில் நடிக்க முடியாத சூழல் விஜய் சேதுபதிக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார். இதனால் வேறு ஹீரோவை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஹீரோயின்களாக தமன்னா, ராசிகண்ணா நடிப்பார்கள் என தெரிகிறது.