விஜய் சேதுபதி: இயக்குனர் அட்லீ இயக்கும் ‘ஜவான்’ இந்திப் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் நயன்தாரா இந்தியில் அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி விஜய் சேதுபதி கூறியதாவது.
‘ஷாருக்கான் இனிமையான மனிதர். அவர் பெரிய நடிகர். இந்தி உலகின் சூப்பர் ஸ்டார். ‘ஜவான்’ படப்பிடிப்பில் நான் முதல் நாள் கலந்துகொண்ட போது பதற்றமாக இருந்தது. அன்று அவருடன் எனக்குக் காட்சிகள் இல்லை என்றாலும் அவர் என்னுடன் இருந்தார். என்னுடன் அவர் நெருக்கமாக பழகி பிறகு என்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். என்னை வசதியாக உணர வைத்தார். அவர் ஜென்டில்மேன். அவருடன் நடித்த நாட்கள் மகிழ்ச்சியானவை’ என்று அவர் தனது அனுபவத்தை கூறினார்.