ஃபார்ஸி: விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடிக்கும் ‘ஃபார்ஸி’ தொடர் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகிறது. இத்தொடரில் ராசி கண்ணா, ரெஜினா கஸ்ன்ட்ரா, கே.கே.மேனன், அமோல் பலேகர், ஜாகிர் உசேன், புவன் அரோரா, குப்ரா சையத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த வலைதள தொடருக்கு ராஜ் மற்றும் டி.கே உடன் இணைந்து சுமன் குமார் மற்றும் சீதா ஆர்.மேனன் ஆகியோர் கதை,வசனம் எழுதி இருக்கிறார்கள். இந்த வலைதள தொடரை டி2 ஆர் பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே தயாரித்திருக்கிறார்கள்.
இந்த தொடருக்கான முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்திற்கான புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் அரங்கத்தில் ஃபார்ஸி வெப் தொடர் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். மேலும் தான் கையொப்பமிட்ட போஸ்டர்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.