சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்

0
10

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என நடிகர் ஜிவா புதிய தகவல்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் ரசிகர்களின் நாயகனாகவும் வலம் வருபவர். விஜய் இறுதியாக நெல்சன் தீலிப் குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். அப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விஜய் ரசிகர்களிக்கு ஆராவாரப்படமாக களம் கண்டது.

தற்போது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் புதிய வருடத்தின் பொங்கலுக்கு திரைக்க வர காத்து இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜயின் ஜோடியாக ராஷிகா மந்தனா நடிக்கிறார். மேலும், பிரபு, சரத்குமார், ஷியாம், பிரகாஷ் ராஜ் என பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர். முதன் முதலாக இயக்குனர் வம்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஜய்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்

இப்படத்திற்கு தமண் இசையமைக்கிறார். இப்படம் வெற்றி படமாக அமையும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சென்னை மற்றும் ஹைதராபாத் என இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் லீக்காகி படக்குழுவை அதிரவைத்தது.

இதன் காரணமாக தற்போது பலத்த பாதுகாப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. மேலும் இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்றும், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் பட பாணியில் எமோஷனல் கலந்த படமாக இருக்கும் என படக்குழு தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளது.

இந்த படத்திற்கு பிறகு, விஜய் லோகேஷ் கனகராஜிடன் இணைந்து நடிக்கவுள்ளார். அதன் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் விஜயை நிடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக நடிகர் ஜிவா தெரிவித்துள்ளார். அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜிவா நடிக்கவுள்ளார் எனவும் இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல்களை பெறவும் வேறு தகவல்களை பெறவும் தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here