அரபிக்குத்து: யூடியூப் நிறுவனம் ஆண்டு தோறும் டாப் 10 வீடியோ பட்டியலை வெளியிடும். 2022ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் டாப் 10 வீடியோவில் ‘பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் 4 வது இடத்தை பிடித்துள்ளது.
இதில் பொது பிரிவில் ‘ஏஜ் ஆஃப் வாட்டர்’ குறும்படம் முதலிடம் பிடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் வீடியோ இந்திய அளவில் நான்காவது இடம் பிடித்துள்ளது. இதற்கு அனிருத் இசையமைத்து பின்னணி பாடியிருந்தார். ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்தார். அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே பெரும் சாதனைகளை படைத்து வந்தது. இந்த பாடல் இணையதளம் முழுக்க வைரலானது. அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல் என்ற பெருமையையும் பெற்றது.
இசை வீடியோ பிரிவில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீவள்ளி’ பாடல் முதல் இடம் பிடித்துள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘சாமி…சாமி’ பாடல் மூன்றாம் இடத்தையும் ‘ஊ….அண்ட வா மாமா’ பாடல் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளது. புஷ்பா படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார்.