விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கிலும் பொங்கலுக்கு வெளியாகிறது

0
7

விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கிலும் பொங்கலுக்கு வெளியாகிறது. இது தொடர்பான பிரச்சனைகளை தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டு தீர்த்து வைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி இயக்கியுள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலிஸ் ஆகின்றது. தமிழிலும் தெலுங்கிலும் ஓரே நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்தது.

பொங்கல் போன்ற விழாக் காலங்களில் தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் அதுவும் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்று கூறியிருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் தமிழகத் திரையரங்கங்களில் இது போன்ற கட்டுப்பாடுகளை இதுவரை நாங்கள் தரவில்லை.

விஜயின் வாரிசு திரைப்படம் தெலுங்கிலும் பொங்கலுக்கு வெளியாகிறது

எந்த விழாக் காலங்களிலும் எந்த மொழி படங்களுக்கும் அனுமதி தரப்பட்டு வருகின்ற தமிழகத்தில் இது போன்றதொரு அறிவிப்பு தென்னிந்திய தயாரிப்பாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பலவித எதிர்ப்புகளும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் ஓருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு எந்த ஒரு சிக்கலுமின்றி தெலுங்கில் திட்டமிட்டபடி அனைத்து இடங்களிலும் ரிலீசாகும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வாரிசு திரைப்பட ரிலீஸ் தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி உள்ளோம் என்றும் அவர்கள் இது தொடர்பாக நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் கட்டா குஸ்தி திரைப்படம்

‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here