விக்ரம் – பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.
நடிகர் விக்ரம் தமிழ்த் திரையுலகில் ரசிகர்களை கவர்ந்தவராக பார்க்கப்படும் நபராக உள்ளார். ஏனெனில் அவர் படங்களில் மெனக்கடல்கள் இருக்கும் கதைக்கருவிற்காக தன் உடலையும் தன்னையும் வருத்தி கொண்டு நடிப்பார்.
தற்போது விக்ரமிற்கு விரைவில் திரையரங்குகளை அலங்கரிக்க கோப்ரா மற்றும் மிகுந்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் என மிக பிஸியாக இருப்பவர். இவ்விரு படமும் வெளியாக காத்து கொண்டுள்ளது. கோப்ரா ஆகஸ்ட 12 அன்றும், பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 அன்று ரீலிசாகிறது.

இந்நிலையில், முதன் முதலாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கடந்தாண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர்கள் விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் இதில் கலந்துகொண்டார். இதன்மூலம் அவர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பா.இரஞ்சித் இயக்கும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும். அதேவேளையில் நடிகர் விக்ரம் உடன் அவர் இணைவது இது 3-வது முறை ஆகும். ஏற்கனவே விக்ரம் நடித்த தாண்டவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு மைதானம் என தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகின. இருந்தாலும், இந்த பூஜையிலும் படத்தின் தலைப்பை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.