விக்ரம் பிரபு: கன்னடத்தில் கடந்த 2018ல் துனியா சூரி இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் ‘டகரு’. தற்போது இந்த படம் தமிழில் ‘ரெய்டு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, அனந்திகா நடிக்கின்றனர். ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.கே.கனிஷ்க், ஜி.கே, ஜி.மணி கண்ணன் இணைந்து தயாரிக்கின்றனர். கதிரவன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி. எஸ் இசையமைக்கிறார். இயக்குனர் முத்தையா வசனம் எழுதுகிறார். அவருடைய உதவியாளர் கார்த்தி இயக்குகிறார்.
ac
இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘கன்னடத்தில் திரைக்கு வந்த ‘டகரு’ படத்தை பார்த்து வியந்த நாங்கள், உடனே அக்கதையை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம். ஆனால் எங்களுக்கு முன்பே இயக்குனர் முத்தையா அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார் என்று அறிந்து நாங்கள் அவரை அணுகினோம். அப்போது அவர் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்துக்கான பணிகளில் பிசியாக இருந்ததால் தமிழ் ரீமேக் பணிகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால் அவர் நாங்கள் விரும்பினால் அவரது அசிஸ்டென்ட் கார்த்தி என்பவரை இயக்குனராக்க வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு நாங்கள் ஓகே சொன்னோம். இதையடுத்து முத்தையா வசனம் எழுதி கொடுத்தார். திரைக்கதை உருவான பின்பு இக்கதையில் நடிக்க விக்ரம் பிரபு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். இதற்கு முன்பு அவர் சில ஆக்ஷ்ன் படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் அவற்றில் இருந்து மாறுபட்டிருக்கும்’ என்று அவர் கூறினார்.