விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா கலைவாணர் அரங்கில்

0
17

உலக நாயகனின் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் வெற்றி விழா நவம்பர் 7 ம் தேதி கலைவாணர் அரங்கில் ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உலகமெங்கும் விக்ரம் திரைப்படம் சிறப்பாக ஓடி வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தியது. தற்போது, இப்படம் 100 நாட்கள் கடந்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இதன் வெற்றியை கொண்டாடும் விதமாக வெகு விமர்சையாக கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹூட் அடித்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபக்த் பாசில், விருந்தினர் நடிப்பில் சூர்யா என பெரிய பட்டாளமே நடித்திருந்தது. அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்து கலக்கியிருந்தார். கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அத்துடன் ரசிகர்களும் படத்தை வெகுவாக கொண்டாடினர்.

விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா கலைவாணர் அரங்கில்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் 175 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர் டிவிட்டரில் விக்ரம் படத்தின் 100 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக தன் பிறந்தநாளான நவம்பர் 7 ம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிட்டு இருப்பதை பதிவு செய்துள்ளார்.

இப்படம் இயக்குனர் லோகேஷிற்கும் நல்ல கேரியரை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கமல் பதிவிட்ட அறிவிப்பில் விக்ரம் பட தயாரிப்பாளர்களான திரு. கமலஹாசன் அவர்களும் திரு.ஆர்.மகேந்திரன் அவர்களும் இவ்விழாவினை ஓருங்கிணைந்து நடத்த திட்டமிட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் வெற்றிக்கு உதவி அனைத்து டெக்னிஷியன் மற்றும் தியேட்டர் விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட் அனைவரையும் கௌரவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here