விநாயகர் சதுர்த்தி 2022 வழிபடும் நேரங்கள் மற்றும் முறைகள்

0
25

விநாயகர் சதுரத்தி விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பிள்ளையார் சூழிப் போட்டு எந்த செயலையும் செய்ய வேண்டும் என்று கடவுளை வணங்குபவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

அந்த விநாயகரின் பிறந்த நாளை போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தான் விநாயகர் சதுர்த்தி. தொந்தி கணபதியை நம் மனதார நினைத்து வணங்கினால் நம் குறைகளை தீர்த்து அருள் புரிவார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

முழு முதற்கடவுளான விநாயகருக்கு ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் எப்படி பூஜைகள் செய்து வழிபடுவது என்பதை இப்பதிவில் பார்க்கலாம். எந்த ஓரு செயலை தொடங்கும் முன்னும் பிள்ளையாரை வணங்கி தொடங்குவது இநது மதக் கொள்கையாகவும் பக்தர்களின் முதன்மை செயலாகவும் உள்ளது.

விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை – படைத்தல், மோதகம் ஏந்திய திருக்கரம் – காத்தல், அங்குச கரம் – அழித்தல், பாசம் உள்ள கை – மறைத்தல், தந்தம் உள்ள கை அருளல்… இப்படி, அவரது ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிப்பது மட்டுமின்றி, ஐங்கரங்களும் ‘சிவாய நம’ என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் என்றும் சொல்வார்கள்.

விநாயகர் சதுர்த்தி 2022 வழிபடும் நேரங்கள் மற்றும் முறைகள்

விநாயகர் சதுர்த்தி கணபதியை வழிபட நல்ல நேரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி புதன்கிழமை காலை 11.05 மணி முதல் பிற்பகல் 01.38மணிவரை உள்ளது.

இதையும் கவனியுங்கள்: திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்

கலி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார்:

கலி மண்ணால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை வைத்து பூஜை செய்வது மிக அருமையானதாக இருக்கிறது. நாமே கலி மண்ணைக் கொண்டு விநாயகர் உருவத்தை வடித்தால் மிக மிக அருமை நாமே செய்து பூஜை செய்யும் விநாயகரை வணங்குவது நமது மனத்தை பேரின்பத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐம்மில்லை.

கலி மண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகரை தான் படைத்து மூன்று நாட்கள் கழித்து நீர் நிலைகளில் கரைப்பதே வழக்கம் அதையே செய்ய வேண்டும். அப்படி நீர்நிலைகளில் கரைக்க முடியாதவர்கள் மூன்று நாள் கழித்து பூஜை செய்த இடத்தை சுத்தமாக துடைத்து பிள்ளாயரை ஓரு பிளாஸ்டிக் வாலி நீரில் கரைத்து அம்மண்ணில் ஏதாவது பூச் செடியை வைக்கலாம்.

கலி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளாயாருக்கு அபிஷகம் செய்ய தேவையான பொருட்கள்:

  • அபிஷேகம் செய்ய சுத்தமான தண்ணீர்.
  • பால், தயிர், திரவியப் பொடி, சந்தனம், தேன், நல்லெண்ணெய், விபூதி, இளநீர், அரிசி மாவு கரைத்து.
  • பிள்ளையார் வேட்டி மற்றும் துண்டு.

பூஜை செய்ய தேவையான பொருட்கள்:

அறுகம்புல்,கற்பூரம், ஊதுபத்தி, கணபதிக்கு உடுத்த ஒரு பட்டுத் துணி அல்லது காவி துணி. பூ, அருகம் புல் அல்லது எருக்கம்பூ மாலை, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு. வாழைப்பழம், உள்ளிட்ட பழங்களை வைக்கவும். விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை, மோதகம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், பலகாரங்கள்.

பழவகைகளில் விளாம்பழம், சோளம், நாவற்பழம், பேரிக்காய், கொய்யாக்கனி, சப்போட்டா, ஆப்பிள், மாதுலை, திராட்சை என அனைத்து வகையான பழங்களையும் பூஜைக்கு வைத்து படைக்கலாம்.

துளசியை பயன்படுத்தக் கூடாது ஏன்?

விநாயகருக்கு எளிமையான அருகம்புல்லும் எருக்கம் பூ மாலையும் பிடித்தமானது. அதே நேரத்தில் துளசியை தப்பித்தவறி விநாயகர் பூஜைக்கு பயன்படுத்தி விடக்கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதற்கான புராண கதையும் சொல்லப்பட்டுள்ளது.

துளசி மரணத்தின் கடவுளான எமதர்மனின் மகள் ஆவார். அவர் தன் இளம் வயதில் விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் தினமும் கங்கை நதிக்கரையில் உள்ள விஷ்ணுவின் கோவிலுக்கு சென்று நதியில் நீராடிவிட்டு விஷ்ணுவை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு தினமும் செய்துகொண்டிருந்த போது ஒரு நாள் கங்கையின் மறுகரையில் ஒருவர் தியானத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்தார். அவரின் தேஜஸை கண்டு மயங்கிய துளசி அவர் மேல் காதலில் விழுந்தார். அந்த தியானத்தில் இருந்தவர் வேறு யாருமல்ல விநாயகர்தான்.

தியானத்தின் போது அவர் எழுப்பிய ஒலி அவரின் வசீகரத்தை மேலும் அதிகரித்தது. இதனால் அவரிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்த எண்ணினார். அதனை நிறைவேற்றவும் செய்தார். உடனடியாக பிள்ளையாரிடம் சென்று தன்னை மணந்துகொள்ளும்படி கேட்டார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத பிள்ளையார் அமைதியாக துளசியின் காதலுக்கும், திருமணம் பற்றிய வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்தார். துளசி அதற்கு காரணம் கேட்டபோது தான் தன் தந்தை சிவபெருமானுக்கு எப்படி பார்வதி தேவி சிறந்த துணையாக இருக்கிறாரோ அதேபோல தானும் தனக்கு தன் அன்னையை போல இருக்கும் பொருத்தமான பெண்ணையே திருமணம் செய்துகொள்ள இயலும் என்று கூறினார்.

விநாயகர் சாபம் தருதல்:

விநாயகரின் இந்த பதில் துளசியின் கோபத்தை அதிகரித்தது, இதை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார். தன் உணர்ச்சிகளை மதிக்காத பிள்ளையாரை அதற்காக தண்டிக்க எண்ணினார். எனவே பிள்ளையாருக்கு சாபமிட துணிந்தார். தன் காதலை மதிக்காத பிள்ளையாருக்கு வருங்காலத்தில் அவர் எண்ணங்களுக்கு எதிராகவே திருமணம் நடக்க வேண்டும் என்று சாபமிட்டார். அதுவரை பொறுமைகாத்த பிள்ளையார் துளசியின் சாபத்தால் கோபமுற்றார். எனவே வருங்காலத்தில் நீ ஒரு அசுரனைத்தான் திருமணம் செய்துகொள்வாய் என்று துளசிக்கு சாபமிட்டார்.

துளசி தான் செய்த தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். மன்னித்த பிள்ளாயார் உடனே சாபவிமோசனத்தையும் அருளினார். பிள்ளையார் தான் அளித்த சாபத்தையே வரமாக மாற்றினார். அதன்படி விஷ்ணுவின் அருளால் துளசி புனிதமான துளசி செடியாக மறுபிறப்பு எடுப்பாய் எனவும், விஷ்ணுவை உன்னை கொண்டு பூஜிப்பார்கள் எனவும் கூறினார். ஆனாலும் நீ என்னிடம் இருந்து எப்போதும் விலகிதான் இருப்பாய் என்னை உன்னை கொண்டு பூஜிக்கக்கூடாது என்று கூறினார்.

விநாயகர் கொடுத்த சாபம் பலித்தது, அதன்படி துளசி அரக்கர்களின் மன்னனான ஜலந்தரனையே மணக்க நேரிட்டது. அரக்கனான அவன் செய்த தவறுகளுக்குகாக பின்னாளில் அவனை சிவபெருமானால் வதைக்கப்பட்டான். அதன்பின் தானும் இறந்த துளசி விநாயகர் கூறியது போலவே புனிதமான துளசி செடியாக பிறந்தார். இன்றைக்கும் விநாயகர் பூஜைக்கு துளசியை பயன்படுத்தாமல் உள்ளதன் காரணம் இதுதான்.

இவற்றை பின்பற்றி விநாயர் சதுர்த்தி திருநாளை சிறப்பாக பூஜித்து மகிழுங்கள். மேலும், இது போன்ற ஆன்மீக தகவல்களையும் ஜோதிடம், தமிழ், கல்வி, செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here