டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தார் ரன் மிஷின் எனப்படும் விராட் கோலி.
தன்னம்பிக்கையால் மீண்டு வந்து இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்து வரும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இவர் தற்போது நடந்து வரும் டி20 உலக கோப்பை தொடரில் தொடர்ந்து நல்ல முறையில் பேட்ங் செய்து பல சாதனைகளை பெற்று வருகின்றார். இதுவரை டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தை பிடித்து வந்த ஜெயவர்தனேவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து வந்த கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபாம் அவுட்டில் இருந்து வந்தார் இதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருந்தி வந்தார்.

அதன்பிறகு, நடந்த ஆசிய கோப்பையில் சதம் அடித்து தன்னை பழைய ஃபாம்மிற்கு கொண்டு வந்தார். தற்போது, நடைபெறும் டி20 உலக கோப்பையிலும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
இன்று நடைபெற்ற பங்களாதேஷ் இந்தியா போட்டியில் 22 ரன்கள் எடுத்திருந்த போது இந்த சாதனை நிகழ்வு அவரை சேர்ந்தது. ஆட்டத்தின் இறுதி விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்து இந்திய அணிக்கு நல்ல ரன்களை பெற்று தந்துள்ளார்.
டி20 உலக கோப்பையில் 1016 ரன்களை குவித்த இலங்கையின் மஹேலா ஜெயவர்தனே தான் முதலிடத்தில் இருந்தார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் அடித்தபோது டி20 உலக கோப்பையில் 1017* ரன்களை எட்டி டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி.
இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் (965 ரன்கள்) 3ம் இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 921 ரன்களுடன் 4ம் இடத்தில் உள்ளார். அடுத்து வரும் போட்டிகளில் விராட் பல சாதனைகளை நிகழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.