ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி

0
11

ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி. வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஓருநாள் போட்டியில் தனது 72 வது சதத்தை பூர்த்தி செய்து ரிக்கி பாண்டிங்கி இதுவரை அடித்த 71 சதத்தை முந்தி சாதனை படைத்தார். 

இந்தியா வங்கதேச மண்ணில் 3 ஓருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க சென்றுள்ளது. இதில் 2 ஓருநாள் தொடர்களில் தோல்வி அடைந்து இந்திய ரசிகர்ளுக்கு ஏமாற்றி வருகிறது. இந்த நிலையில் இறுதி ஓருநாள் போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா என ஆவலோடு இந்திய ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்த போட்டியில் டாஸை வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. தவான் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க எதிர்முனையில் இருந்த இஷான் கிஷான் உறுதுணையாக இருந்து தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் விளாசி இந்திய ரசிகர்களை மட்டும் அல்லாது வங்கதேச ரசிகர்களையும் அன்னாந்து பார்க்க செய்தார்.

ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி

மறுபுறம் விராட் தனது நிதானமான ஆட்டத்தால் மூன்று வருடங்கள் கழித்து ஓருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 85 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் 72 வது சதத்தை பதிவு செய்து சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த ரிக்கிபாண்டிங்கின் சாதனையை முறியடித்து முந்தினார். அவர் இதுவரை 71 சதங்களை அடித்து இருக்கிறார்.

முதல் இடத்தில் 100 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அடுத்த இடத்தில் விராட் கோலியும் மூன்றாவது இடத்தில் ரிக்கிபாண்டிங்கும் இருக்கின்றனர். நான்காவது இடத்தில் 63 சதங்களுடன் இலங்கை வீரர் குமார் சங்ககரா உள்ளார். இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிய கோப்பை டி20 தொடரில் சதம் அடித்து 71 வது சதத்தை ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்து இருந்தார்.

இதையும் படியுங்கள்: கிறிஸ் கெய்லின் சாதனையை உடைத்த இஷான் கிஷான்

இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி தனது 44வது சதத்தை பதிவு செய்தார். இதனை விராட் கோலி 85 பந்துகளில் பூர்த்தி செய்தது தான் ஹைலைட். இதில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். கோலி 91 பந்துகளை எதிர்கொண்டு 113 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here