விராட் கோலி தனது 71வது சதத்தை நிறைவு செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ரன் மழை பொழிந்தார் கோலி.
இந்திய கிரிக்கெட் அணியில் தலைச்சிறந்த வீரராக விளங்கியவர் கோலி பல சாதனைகளை நிகழ்த்தியவர் என்றால் மிகையாகாது. இருந்தும் 3 வருடங்களாக ஓரு சதம் கூட அடிக்காமல் சிரமப்பட்டார். பல விமர்சனங்களுக்கும் ஆளாகி மனரீதியாகவும் பாதிப்படைந்தவராக இருந்தார். அவரே தான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று வெளிப்படையாக கூறினார்.
இந்நிலையில், ஆசிய கோப்பை 2022க்கான போட்டிகளில் விளையாட பிசிஐயால் அறிவுறுத்தப்பட்டார். புது உற்சாகத்துடன் விளையாடிய கோலி கடந்த 3 போட்டிகளில் 2 அரைசதமும் கண்டார். தற்பொழுது நேற்று நடந்த ஆப்கான் அணியுடன் மோதிய போட்டிகளில் குறைந்த பந்தில் சதம் விளாசியதுடன் பல சாதனைகளையும் படைத்தார்.

இப்போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கோலி 61 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதில் 6 சிக்ஸர்கள் 12 பவுனடரிக்ள் அடங்கும். வலுவான ரன்களையும் இந்திய அணிக்காக விளையாடி தந்தார்.
இந்த 71 வது சத்தை அடிக்க கோலிக்கு 1020 நாட்கள் தேவைப்பட்டது. இதற்கு முன்னர் 2019 ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இருந்தார்.
இந்த போட்டியில் 122 ரன்களை குவித்ததன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மவின் (118 vs இலங்கை) சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 71வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி, ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கும் நிலையில், 2வது இடத்தை ரிக்கி பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார் கோலி.
ரிக்கி பாண்டிங் 668 சர்வதேச இன்னிங்ஸ்களில் 71சதங்களை விளாசியுள்ளார். விராட் கோலி 522 இன்னிங்ஸ்களில் 71 சதங்களை விளாசி, 2ம் இடத்தை பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார்.