தோனி குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

0
12

தோனியும் நானும் விளையாடிய தருணங்கள் என் வாழ்வில் மிக மகிழ்ச்சிக்குரிய தருணங்கள் தோனி எனக்கு ஓரு நம்பிக்கைக்குரிய மற்றும் ஊக்கமிக்க நண்பர் நாங்கள் விளையாடிய தருணங்கள் என் வாழ்வில் மறக்க முடியா நிகழ்வுகள் என விராட் கோலி டிவிட்டர் மூலம் பதிவிட்டுள்ளார். 

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக இருப்பவர். அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் வழி நடத்தினார். சமீபகாலமாக அவர் கிரிக்கெட்டில் சிரியாக விளையாடததால் ரசிகர்கள் மற்றும் ஐசிசி தலைவர்கள் முன்னால் விளையாட்டு வீரர்கள் என பலர் அவரை சாடினர்.

கடந்த 3 வருடங்களாக ஓரு சதம் கூட அடிக்காமல் இருப்பதால் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். பலர் அவரை பேட்டிங்கில் பாம் குறைந்து விட்டதால் அவர் மிகவும் பேசு பொருளாக அமைந்தார். ஆனாலும் அவரால் சரிவர விளையாட முடியாமல் தவித்தார். பல போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வும் அளிக்கப்பட்டது.

தோனி குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி

இந்நிலையில், ஓய்வு நேரங்களில் தன்னம்பிக்கையுடன் உடற்பயிற்சி மற்றும் கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார். தற்போது ஆசிய கோப்பைக்கான போட்டிகளில் இடம் பெறுவாரா இல்லையா என்ற சந்தேகமே இருந்து வந்தது. ஐசிசி தலைவர்கள் இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவார் என அறிவித்தது.

வருகின்ற 27 ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பையில் தனது முழு திறமையையும் காட்டுவார் என எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர் ரசிகர்கள். இந்த சூழ்நிலையில் நேற்று விராட் கோலி தனது டிவிட்டர் சமூக வளைதளத்தில் தோனி குறித்தும் தானும் அவரும் நல்ல நண்பர்களாக விளையாடிய தருணங்கள் என் வாழ்வில் மறக்க முடியா மற்றும் மகிழ்ச்சிக்குரிய உற்சாகமான தருணங்கள் என்றும் 7+18 என்ற ஜெர்சி நம்பரையும் பதிவிட்டு மகிழ்ந்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here