ஓரு மாதமாக கிரிக்கெட் பேட்டை தொடவில்லை. கடந்த பத்து வருடங்களில் இதுவே முதன் முறை என தன் மனநிலை குறித்து மனம் திறந்தார் விராட் கோலி.
10 வருடங்களில் முதன் முறையாக ஓரு மாதம் கிரிக்கெட் பேட்டை நான் தொடவில்லை. சிறிய பிரேக் தேவை என மனம் சொன்னது. நான் மனதளவில் எவ்வளவு பலமானவன் என்பது எனக்கு தெரியும் ஆனால் அனைவருக்கும் ஓரு வரம்பு இருக்கும். ஆனால் அந்த வரம்பை நீங்கள் அங்கிகரிக்க வேண்டும். இல்லையெனில் விஷயங்கள் உங்களுக்கு ஆரோகியமற்றதாக இருக்கும், என இந்திய நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதல் முறையாக தன்னுடைய மனநலம் குறித்து பேசி இருக்கிறார். விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 14 ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் கோலி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்காததால் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானார்.

குறிப்பாக அவருடைய பேட்டிங் கடுமையாக பாதித்தது. விராட் கோலி முன்பை போல் விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் எழ தொடங்கின.
இவ்வளவு அழுத்தத்தை தாங்கிக்கொண்டிருந்த கோலி, திடீரென்று இங்கிலாந்து தொடருக்கு பிறகு தமக்கு ஓய்வு வேண்டும் என பிசிசி ஐயிடம் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் ஒன்றரை மாதத்திற்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள விராட் கோலி ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு விராட் கோலி அளித்துள்ள பேட்டியில் தமது மனநலம் குன்றியிருந்ததாக முதல்முறையாக கூறினார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன் என்பதை ஒப்புக்கொள்ள நான் வெட்கப்படவில்லை.