அஷ்வினுக்கு தைரியம் அதிகம் என பாராட்டியுள்ளார் விராட் கோலி. கடந்த பாகிஸ்தானுடன் நடந்த பரப்பரப்பு மிகுந்த போட்டியில் அஸ்வின் எடுத்த முடிவை பாராட்டி கூறினார் கிங் கோலி.
இந்தாண்டின் T20 போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்குமுன் பல அணிகள் வாம்அப் போட்டிகளை நடத்தியது. இருபுறம் பட்டியலில் முதல் 8 வரை உள்ள அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தியாக்கு முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியுடனான போட்டி மெல்பர்னில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
உலக நாடுகளே எதிர்பாத்திருந்த போட்டியாக இந்த போட்டி அமைந்திருந்தது. ஏற்கனேவை இந்தியாவை வீழ்த்தி இருந்த பாகிஸ்தான் அணிக்கு பதிலடியாக இந்த போட்டியின் வெற்றி அமைந்தது குறிப்பிடத்தக்கது. பரப்பரக்கு பஞ்சம் துளியும் இல்லாத போட்டியாக கடைசி பந்து வரை இருந்தது.

இந்த போட்டியின் கடைசி பந்தில் களமிறங்கிய அஸ்வின் பவுண்டரி அடித்து வெற்றி உறுதி செய்திருந்தார். குறிப்பாக கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் வந்தவுடன் தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழந்து வெளியேறினார். அப்போது ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய அஸ்வின் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே அவ்வளவு பரபரப்பான சூழ்நிலையும் மிக சாதாரணமாக கையாண்டு வொயிடு வாங்கினார்.
இதன் காரணமாக போட்டி சமநிலையில் இருக்கவே கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியும் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில் அஸ்வின் வந்து களமிறங்கிய பின்னர் அந்த கடைசி பந்தில் என்ன நடந்தது என்பது குறித்த சுவாரசியமான தகவலை தற்போது விராட் கோலி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : அஸ்வின் கடைசி பந்தினை எதிர் கொள்ள வரும்போது நான் அவரை பந்தை கவர் திசையில் தூக்கி அடித்து விட்டு இரண்டு ரன்கள் ஓடி விடலாம் என்று கூறினேன்.
ஒரு ரன் ஓடினால் கூட போட்டி சமமாகும் என்பதனால் எப்படியாவது இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அவரை கவர் திசையில் பந்தை தூக்கி அடிக்குமாறு அறிவுரை கொடுத்தேன். ஆனால் அஸ்வின் நான் சொன்ன பேச்சை கேட்கவில்லை அந்த நெருக்கடியான நேரத்தில் கூட அவர் பந்து வைடாகத்தான் செல்கிறது என்று கூலாக வொயிடு வாங்கினார். அவரது அந்த செயல் உண்மையிலேயே தைரியமான விஷயமாகும்.
அப்போது போட்டி சமன் அடைந்ததால் கடைசி பந்திலாவது அவர் கவர் திசையில் அடிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் நினைத்ததற்கு நேர்மறையாக சர்க்கிளுக்கு வெளியே தூக்கி அடித்தார். அஸ்வினுக்கு உள்ள கிரிக்கெட் மூளை கூடுதல் என்பது இதை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம் என விராட் கோலி அஸ்வினை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.