மேற்கிந்திய சுற்றுப் பயணத்தில் விராட் கோலிக்கு ஓய்வு

0
13

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட இண்டிஸ் மண்ணில் விளையாட உள்ள இந்திய அணியில் கோலி மற்றும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

மூன்று ஓருநாள் தொடரையும் 5 டி20 தொடரையும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணியும் விளையாட உள்ளது. இதில் ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்றும் விராட் கோலி மற்றும் பும்ராவிற்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்படுவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல். ராகுல், குல்தீப் யாதவ் இருவரும் இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இடுப்பு காயம் காரணமாக வெளியேறிய கோலி, இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் இருந்தும் விலக வாய்ப்புள்ளது.

மேற்கிந்திய சுற்றுப் பயணத்தில் விராட் கோலிக்கு ஓய்வு

இதற்கிடையில், கடந்த சில நாட்களாகவே கோலியின் ஃபார்ம் குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக அவர் சதம் அடிக்கவில்லை என்று கபில்தேவ் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் அணியில் அவரது இடம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்செயலாக, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பேட்ஸ்மேன் கோலியின் வீழ்ச்சியை கபில் கணித்திருந்தார்; கோலியின் கண்பார்வை அனிச்சைகளின் வேகத்தைக் குறைப்பதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று கூறிய அவர், அனிச்சை மற்றும் கை-கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்த கோலி சிறப்புப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

ஜூலை 22, 24, 27, மூன்று ஒருநாள் போட்டிகளும் போர்ட் ஆஃப் ஸ்பெயினில். பிறகு டி20 போட்டிகள், ஜூலை  29, பிறகு ஆகஸ்ட் 1, 2, 6,7  ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, எஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் , ஹர்டிக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல்,அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

*கேஎல் ராகுல் & குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here