விராட் கோலியுடன் ADVENTURE செய்ய வேண்டும் என பியர் கிரில்ஸ் விருப்பம்

0
9

‘விராட் கோலியுடன் ADVENTURE செய்ய வேண்டும்’ என Man & Wild தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகவும் துடிப்பான இளைமையான துல்லளான ஆட்டக்காரர். இவர் இந்திய அணியின் ஓரு காலத்தில் ரன் மிஷினாக பார்க்கப்பட்டவர். தற்போது பல போட்டிகளில் தனது பங்களிப்பை தர இயலவில்லை. அவருக்கு இது ஓரு போதாத காலமாக உள்ளது. கிரிக்கெட்டில் பல நேரங்களில் விராட் கோலி தனது பங்கினை வழங்கி வருபவர்.

பேட்டிங் மற்றும் பில்டிங்கில் சிறப்பான தன் திறமையை வழங்குபவர் விராட் நம்பிக்கை நாயகனாக உலா வந்தவர். இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார்.

விராட் கோலியுடன் ADVENTURE செய்ய வேண்டும் என பியர் கிரில்ஸ் விருப்பம்

இருந்தும் இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். தற்போது இந்தியாவின் சர்வதேச கிரிக்கெட் அசைன்மென்டுகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பியர் கிரில்ஸ் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“விராட் கோலி உடன் இணைந்து சாகசம் மேற்கொண்டால் அற்புதமாக இருக்கும். அவரது ஸ்பிரிட்தான் அதற்கு காரணம்” என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். இவரது Man vs Wild நிகழ்ச்சி இந்தியா உட்பட உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது.

பிரதமர் மோடி, சினிமா நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ரன்வீர் சிங் போன்றவர்கள் இந்திய காடுகளில் பியர் கிரில்ஸ் உடன் Man vs Wild சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவரது அடுத்த Man vs Wild சாகச பயணத்தில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here