விருதுநகர்: கல்லூரி மாணவர் ஆன்லைன் ரம்மியால் தூக்கிட்டு தற்கொலை

0
6

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரை சார்ந்த 21 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பணத்தை இழந்ததன் காரணமாக கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செயல் பரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழந்து குடும்பத்தை நிற்கதியில் விட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கல்லூரி மாணவர் இந்த செயலால் தற்கொலை செய்துள்ளது பேரும் துயரமாக பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ரம்மி மோகம் இளைஞர்களிடையே வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த சூதாட்டத்தால் பலர் தங்களின் குடும்ப வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் தொடர்ந்து பல துயரச் சம்பவங்கள் நடந்து வருகிறது.

ஆதிமுக ஆட்சி காலத்தில் அரசின் உத்தரவு காரணமாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. பின்னர், திமுக ஆட்சியில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை நீக்கப்பட்டது. தற்போது இது குறித்து ஆய்வரிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த ரம்மி விளையாட்டை நிரந்தரமாக தடை செய்யாமல் உள்ளது.

விருதுநகர்: கல்லூரி மாணவர் ஆன்லைன் ரம்மியால் தூக்கிட்டு தற்கொலை

திமுக அரசு இது சம்பந்தமான அறிக்கையை வெளியிட்டு இதற்கு ஆளுநர் ஓப்புதல் அளிக்காமல் அதை தவிர்த்து வருவதாக கூறியுள்ளார். ஆளுநரை சந்தித்து பலமுறை மனு அளிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு கூறி வரும் நிலையில் இந்த ரம்மி விளையாட்டுக்கு விளம்பரம் செய்து வரும் நடிகர் சரத்குமார் இது போன்ற விளையாட்டுகளை பார்த்து விளையாட வேண்டும் எதற்கும் அளவு உண்டு என்றும் விளையாட சொல்லி யாரும் உங்களை வற்புறுத்த போவதில்லை எனவும் கூறினார்.

இதை மக்கள் வெகுவாக கண்டித்து வந்தனர் இது போன்ற விளம்பரங்களில் எந்த ஓரு நடிகர்களும் நடிக்க ஓப்புதல் அளிக்கக் கூடாது என்றும் கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்த வந்தார் சரத்குமார்.

தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவர் ரம்மியில் பணத்தை இழந்து விடுதி அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here