விஸ்வகர்மா பூஜா 2022: வழிபாடும் வரலாற்று முக்கியத்துவமும்

0
6

விஸ்வகர்மா பூஜா 2022: வழிபாடும் வரலாற்று முக்கியத்துவமும், இன்று விஸ்வகர்மா பூஜையானது வடமாநிலங்களில் பல இடங்களில் மிக கோலாகலமாக கொண்டாடப்படும் ஓரு வழிப்பாட்டு முறையாக பின்பற்றப்படுகிறது. 

இந்தியா ஓரு ஜனநாயக நாடு அனைத்து மதத்தினரும் வாழக்கூடிய புண்ணிய நாடாகவும் விளங்கி வருகிறது. மக்களிடம் எந்த ஓரு பாகுப்பாடுகளும் இன்றி அவரவர் விருப்பத்தின்படி பல பண்டிகைகள் அனைவரும் சுகந்திரமாக கொண்டாட உரிமை உள்ளது. சாதி, மத வேற்றுமை இன்றி ஓற்றுமையுடன் திகழ இதுவே எடுத்துக்காட்டாக இருந்து வரும் நாடாகவும் இந்தியா இருக்கிறது.

அவ்வகையில் இந்துக்களால் ஓவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி முடிந்த சில நாட்களில் விஸ்வகர்மா பூஜையை நிகழ்த்துவது உண்டு. இது தமிழ் மாதமான ஆவணி இறுதி நாட்களில் கொண்டாடப்படுகிறது. உலகை உருவாக்கியர் விஸ்வகர்மா என்று இந்துக்களால் நம்பப்பட்டு வருகின்றது. அதன்படி வடஇந்தியார்கள் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகை பற்றிய முழுவதகவல்களையும் விஸ்வகர்மா வழிபாட்டையும் இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

விஸ்வகர்மா பூஜா 2022: வழிபாடும் வரலாற்று முக்கியத்துவமும்

விஸ்வகர்மா பெயர் காரணம்:

தேவலோகத்தின் தச்சராக விளங்குபவராகவும் இந்த உலகத்தை தோற்றுவித்தவராகவும் இந்துக்களால் வணங்கப்படுபவராக விளங்குபவர் விஸ்வகர்மா. சுயம்புவாக உருவானதாக நம்பப்படுபவர். இவர் மிகச்சிறந்த கட்டிட  வடிவமைப்பாளராகவும் தெய்வீக தச்சர் என அழைக்கப்படுபவராக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புராண கால தேவலோகச் சிற்பி, சிறந்த கட்டடக்கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், தொழில் படைப்பாற்றலுக்கானத் தெய்வம் என அழைக்கப்படுபவர் விஸ்வகர்மா. மனிதன் பொறியியல் கல்வி விஞ்ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்ள மூலகாரணமாக இருப்பவர் இவர்தான். தொழிலாளர்களுக்கும், கைவினைக் கலைஞர்களுக்கும் ஞானம் அளிப்பவர். அழகுப் பெட்டகமென, உள்ளம் கவரும் கலை ரசனைமிக்க, குறைபாடில்லாத சிற்பங்களை உள்ளடக்கிய கட்டடங்களை உருவாக்குவதில் வல்லமை மிக்கவர்.

விஸ்வகர்மா தோற்றம்:

விஸ்வகர்மா சுயம்புவாக தோன்றியவராக அறியப்படுகிறார். இவர் தான் கிருஷ்ணரின் துவாரகையை வடிவமைத்தவராகவும் குறிப்பிடப்படுகிறார். வட இந்தியாவில் பின்பற்றப்படும் ‘கன்யா சங்கராந்தி’ எனும் இந்து நாள்காட்டியின் கடைசி மாதமான பாதோ மாதத்தின் கடைசி நாளாக கொண்டாடப்படுகின்றது.

விஸ்வகர்மா பூஜை:

நாம் நவராத்திரி கடைசி நாளில் சரஸ்வதி – ஆயுத பூஜை கொண்டாடுவதுபோல், வட இந்திய மாநிலங்களான, திரிபுரா, அஸ்ஸாம், பீகார், ஜார்கண்ட், மே.வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு வெகு கோலாகலமாக வணங்கப்படும் ஆயுத பூஜை விழாவுக்கு ‘விஸ்வகர்மா பூஜை’ என்று பெயர்.

தமிழகத்திலும் ஓரு சிலரால் இந்த விஸ்வகர்மா பூஜை வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது.

விஸ்வகர்மா பூஜை 2022: 

விஸ்வகர்மா ஜெயந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 – 19 தேதிக்குள் கொண்டாடப்படுகின்றது. இந்த தினம் ஆவணி 31ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியான இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

விஸ்வகர்மா பூஜை வரலாறு:

பூமி, உலகம், தேவலோகம் ஆகிய அனைத்துக்கும் பிரம்ம தேவனின் ஆணைக்கிணங்க அழகான வடிவம் தந்தவர். சத்ய யுகத்தில் சொர்க்கத்தையும், திரேதாயுகத்தில் தங்கத்தில் ஜொலித்த இலங்கையையும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகையையும் நிர்மாணித்தவர். இவைதவிர, இந்திரன், யமன் அரண்மனை, கடலுக்குக் கீழ் வருணனுக்கு மாளிகை மற்றும் அஸ்தினாபுரம், இந்திரப்ரஸ்தம் நகர்களையும் உருவாக்கியவர். இவைமட்டுமின்றி, தேவர்கள், தேவியர் அணிந்திருந்த பல்வேறு ஆபரணங்களைத் தயாரித்தவரும் இவரே.

இந்திரனின் வஜ்ராயுதத்தை வடிவமைத்தவர்:

தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தன் உடல் எலும்புகளால் பலவிதமான ஆயுதங்களை விஸ்வகர்மாவைச் செய்யச் சொன்னார் ததீசி ரிஷி. அவரின் முதுகுத் தண்டுவடத்தைக் கொண்டு உருவானதே இந்திரனின் ‘வஜ்ராயுதம்.’ சூரியனின் மனைவியான இவரது மகள் சஞ்சனா, கணவரின் உஷ்ணம் நிறைந்த கதிர்களின் தீவிரத்தைச் சற்றுக் குறைக்கும்படி தந்தையிடம் வேண்ட, இவரும் சூரியனிடமிருந்து எட்டில் ஒரு பங்கு பிரகாசத் தீவிரத்தைக் குறைத்தார்.

கீழே விழுந்த அந்தத் துகள்களிலிருந்து விஷ்ணுவுக்கு ‘சுதர்சனம்’ என்ற சக்ராயுதத்தையும், சிவனுக்குத் ‘திரிசூல’த்தையும், தேவர்களின் உபயோகத்துக்காகப் ‘புஷ்பக விமான’த்தையும் உருவாக்கினார். மேலும், தான் இயற்றிய ‘ஸ்தாபத்ய வேதம்’என்ற நூலில் 64-வகை இயந்திரவியல் நுணுக்கங்கள், சிற்பக்கலை அறிவாற்றல் பற்றிய விளக்கங்களையும் விவரித்திருக்கிறார்.

வசிஷ்ட முனிவரின் சாபம்:

சுறுசுறுப்பான படைப்புத் திறனுக்கு அதிபதியாதலால் அதற்குரிய சிவப்பு வண்ணப் பின்புலத்திலேயே, யானை வாகனத்தில் அமர்ந்தவராகக் காணப்படுகிறார். இவர், வசிஷ்ட முனிவரின் சாபத்தினால் மறுபிறவியில் கங்கை – மகாராஜா சந்தனுவின் எட்டாவது மகன் தேவவிரதன் என்ற பீஷ்மராகப் பிறந்தவர்.

யோகசித்தா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் காயத்ரி. இவர்களது ஐந்து மகன்களும் புகழ்மிக்க முனிவர்களாகவும், தந்தையைப் போன்று தங்கள் தங்கள் துறைகளில் தலைசிறந்த விற்பன்னர்களாகவும் விளங்கினர். அவர்கள் மனு (கருமான் என்கிற கொல்லன்), மயன் (தச்சர்), த்வஸ்தா (உலோக வேலைப்பாடு மற்றும் வார்ப்படத் துறை), சில்பி (கைவினைக் கலைஞர், கொத்தனார்) மற்றும் விஸ்வஞர் (தங்கம், வெள்ளி, இரத்தினம், வைர நகைகள் தயாரிக்கும் பொற்கொல்லன்) ஆவர்.

கன்னி சங்கராந்தி தினம்:

வட இந்தியப் பஞ்சாங்கப்படி பாத்ரபத் (புரட்டாசி) மாதம் முடியும் கடைசி நாளன்று, சூரியன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயரும் போது விஸ்வகர்மா பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. எப்போதும் செப்டம்பர் 17 – ஆம் தேதியே இந்நாளாக விளங்குகிறது.

அன்றைய தினம், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் காரியாலயங்களில் தாங்கள் கையாளும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களைச் சுத்தப்படுத்தி, புது வண்ணம் பூசி ஜோடிப்பார்கள். செய்யும் தொழில் வளமுடன் பெருகவும், விபத்துகளின்றி நாட்கள் நகரவும் தேவலோகச் சிற்பியின் அருள் வேண்டி கோலாகலமாக விழா நடத்தப்படும்.

புதிய பொருட்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தவும், உற்பத்தித் திறனைப் பெருக்கவும், தொழிலாளர்கள் விஸ்வகர்மா சிலை அல்லது படத்தின் முன் உறுதிமொழி எடுப்பார்கள். அன்றைய தினம் விடுமுறை விட்டு மறுநாள் வேலையைத் தொடர்வார்கள்.

கலைத்திறனுக்கும், அதன் மேம்பாட்டுக்கும் உதாரணமாய் விளங்கும் விஸ்வகர்மாவின் நினைவுக்கு ஒரு சான்றாக எல்லோராவின் பத்தாம் குகை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பல தகவல்களையும் ஆன்மீகம், ஜோதிடம், கல்வி, தமிழ் இலக்கியம், வரலாறுகள், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here