விருத்தாசலம்-விருத்தகிரிஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு விருத்தாம்பிகை அம்மனுக்கு தேரோட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது தமிழகத்தில் உள்ள கோயில்களில் மிகவும் பழமையான புகழ்பெற்ற தலமாக இருந்து வருகிறது. இந்த கோயிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர உற்சவம் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கோயிலில் பத்து நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மேலும், ஆடிப்பூர திருவிழாவினை ஓட்டி தினமும் இரவு வாகனங்களில் விருத்தாம்பிகை அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று இரவு மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அதன்படி, இந்தாண்டு ஆடிப்பூர விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெரும் திருவிழாவில் தினமும் சாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 31ஆம் தேதியன்று தேரோட்டம் சிறப்பாக நடந்தேறியது.
தொடர்ந்து, நாளை 2ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.