சபரிமலைக்கு சென்னையிலிருந்து வாராந்திர சிறப்பு ரயில் தொடக்கம்

0
2

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பயணத்தை எளிமையாக்கும் விதமாகவும் மகரவிளக்கு பண்டிகை காலம் என்பதாலும் பக்தர்கள் வெகு அளவில் கூடி ஐயப்பனை தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம் இதன் காரணமாக தென்னக ரயில்வே சென்னையிலிருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயிலை இயக்க முடிவு செய்து இதன் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்து மக்களின் மிகவும் பிரசித்தி பெற்ற கடவுளர்களில் ஐயன் ஐயப்பனும் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை தரிசனம் செய்ய ஓரு மண்டலம் விரதம் இருந்து எந்த நேரமும் ஐயன் ஐயப்பனையே நினைத்து இரு வேலை சுத்தமாக குளித்து ஐயப்பனுக்கு உரிய துளசி மாலை அணிந்து ஐயப்பன் மந்திரங்கள் ஜபித்து மழு மனதோடு தூய்மையாக இருந்து நல்லதையே பேசுவது தீய பழக்க வழக்கங்களில் ஈடுபாடாது இருந்து சபரிமலைக்கு வந்து ஐயனை தரிசனம் செய்து இன்புறுவதால் பல எண்ணற்ற பலன்களை இறைவன் தருவான் என்பது நம்பிக்கை.

சபரிமலைக்கு சென்னையிலிருந்து வாராந்திர சிறப்பு ரயில் தொடக்கம்

தமிழ் வருடத்தின் முதல் நாள் முதல் மூன்று நாட்கள் மட்டுமே திறக்கப்படும் சன்னதானம் மகரவிளக்கு பூஜைக்காக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முழுவதுமாக திறந்து வைத்து விதவிதமான பூஜைகள் நடத்தப்படும் இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து இந்த நாட்களில் வந்து ஐயப்பனை தரிசனம் செய்வர்.

பக்தர்களின் பயணத்தை எளிமையாக மாற்றுவதற்காக இக்காலங்களில் சிறப்பு ரயிலை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னயிலிருந்து திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இயக்கப்படும். அதை போல, கொல்லத்திலிருந்து சென்னைக்கு செவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளிலிருந்து இயக்கப்படுகின்றது.

இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று முதல் தொடங்கபட்டுள்ளது குறிப்படத்தக்கது. சபரிமலைக்கு ரயில்கள் இயக்கப்படுவதை உறுதி செய்துள்ளது தென்னகரயில்வே இதனை ஐயப்ப பக்தர்கள் அனைவரும் வரவேற்று மகிழ்ந்துள்ளனர்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here