டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. அந்த போட்டிகளில் பங்கு பெற முதல் எட்டு இடங்களை வகிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன்களான இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் சூப்பர் 12 சுற்றில் வென்றால் இந்த உலகக் கோப்பை சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்து வந்தது.
அதில் நடிப்பு சாம்பியனான இலங்கை அணி டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. அதே போல மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி இன்று நடந்த அயர்லாந்து அணியுடன் மோதி தோல்வியுற்று இந்தாண்டு உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்குமுன் நடந்த ஸ்காட்லாந்துடனும் மோதி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இன்று டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வ செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிரான்டன் கிங் 62 ரன்கள் எடுத்தார்.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கிய விளையாட தொடங்கிய ஐயர்லாந்து அணியின் பேட்டர்கள் 20 ஓவர் முடிவில் ஓரு விக்கெட் மட்டும் இழந்து 150 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீசை உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளது.
அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பவுல் ஸ்ட்ரிலிங் 66 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது. குரூப் ஏ பிரில் இலங்கை மற்றும் நெதலார்ந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் வேதனையுடன் பார்த்துக் கொண்டுள்ளனர். ஸ்காட்லாந்து மற்றும் ஐயர்லாந்திடம் தோற்றதால் இத்தொடரை விட்டு வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி.