ஜெய் பீம் திரைப்படம் என் மனதை தொட்டு விட்டது குமாரசாமி

0
9

ஜெய் பீம் திரைப்படம் என் மனதை தொட்டு விட்டாது என கர்நாடக முன்னால் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடிகர் சூரியாவின் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ஜெய் பீம். இதில் சூரியா ஓரு வக்கிலாக வந்து கதை தளத்திற்கு நல்ல உயிரோட்டமாகவும் கதாநாயகனாகவும் நடித்திருப்பார். இப்படத்தில் வரும் கதை ஓரு உண்மை சம்பவத்தை தோல் உரிக்கும் படமாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெய் பீம் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. கடந்த வருடத்தில் தமிழின் மிக முக்கியமான படமாக ஜெய் பீம் உருவெடுத்தது.

ஜெய் பீம் திரைப்படம் என் மனதை தொட்டு விட்டது குமாரசாமி

இந்நிலையில், கர்நாடக முன்னால் முதலமைச்சர் குமாரசாமி சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஓரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது பொழுதுப்போக்கிற்காக புத்தகங்கள் படிப்பது திரைப்படம் பார்ப்பது என இருந்தார். அவர் பார்த்த இரண்டு படங்களும் என் மனதை தொட்டு விட்டதாக கூறினார். அதில் ஓன்று ஜெய் பீம் மற்றொன்று ஜனகன மன என்பதையும் கூறினார்.

பொய் கேசில் சிறைக்கு செல்லும் ராஜாக்கண்ணுவிற்கு என்ன நடக்கிறது.. என்ற ஒற்றை புள்ளிதான் படத்தின் கதை. இருளர்கள் உள்ளிட்ட பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் அதிகார அழுத்தம், இன்னல்கள், போலீஸ் டார்ச்சர், சட்ட போராட்டம், உரிமைக்கான குரல் என்று பல விஷயங்களை ஜெய் பீம் அதிரடியாக பேசுகிறது.

இன்றைய அரசியலில் உள்ள பாசாங்குத்தனம், தந்திரம் மற்றும் விபச்சாரம் ஆகியவற்றை பற்றி இந்த படம் பேசுகிறது. அரசியல் வாதிகளில் கைகளில் சிஸ்டம் எப்படி சிக்கி தவிக்கிறது என்பதை இதை காட்டுகிறது. இந்த சிஸ்டத்தை கண்ணாடி போல பிம்பமாக காட்டி இருக்கிறது சினிமா. இரண்டு படங்களின் இயக்குனர்களுக்கும் எங்களுடைய பாராட்டுக்கள், என்று குமாரசாமி தனது ரிவ்யூவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here