வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் சட்டம் என்ன சொல்கிறது

0
17

வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாகிறது. இந்த வாடகை தாய் பற்றி சட்டம் என்ன சொல்கிறது என்பதை இப்பதிவில் காணலாம்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முறைப்படி ஜூன் மாதம் சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் தனியார் ரிசார்ட்டில் மிக பிரமாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு பல சினிமா நட்சத்திரங்கள் பங்கு பெற்றனர். அந்த திருமணத்தில் புகைப்படம் எடுப்பது மற்றும் ஊடகங்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. ஏனெனில், அந்த நிகழ்வுகளை வெப் சீரியஸாக எடுக்க நெட்ஃப்லிக்ஸ் அனுமதி அளித்து அதன்படி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராமில் எனக்கும் நயனுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என நேற்று டிவிட் செய்திருந்தார். திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆனநிலையில் இது எப்படி சாத்தியமாகும் என அனைவரும் கேள்வி எழுப்பிய நிலையில் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்று உள்ளனர் என்பது தெரிய வந்ததுள்ளது.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் சட்டம் என்ன சொல்கிறது

இந்த வாடகை தாய் மூலம் பல வட இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலர் இம்முறையில் குழந்தைகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரி வாடகை தாய் மூலம் குழந்தை பெறுதல் என்றால் என்ன என்பதையும் சட்டம் என்ன சொல்கிறது என்பதையும் விரிவாக பார்ப்போம்.

வாடகை தாய் முறை என்றால் என்ன?

ஓரு ஆணின் விந்தணுவை எடுத்து செயற்கையான முறையில் வேறு ஓரு பெண்ணின் கருமுட்டைக்குள் இந்த விந்தணுவை செலுத்தி அதன் மூலம் குழந்தை பெறுவது வாடகை தாய் முறை எனப்படுகிறது. இதில் இருவகைகள் உள்ளன.

1. ஆணின் விந்தணுவை வேறு ஓரு பெண்ணின் கருமுட்டையில் செலுத்தி குழந்தை பெறுவது ஓரு வகை. (Surrogacy in the traditional sense) அதாவது பாரம்பரிய வகை.

2.ஆணின் விந்தணு மனைவியின் கருமுட்டையுடன் சேர்க்கப்பட்டு கருவாக உருவாக்கப்படும். பின்னர், அந்த கருமுட்டை வாடகை தாயின் வாயிற்றில் சேர்க்கப்படும். இதனை கர்பகால வாடகை தாய் முறை (Gestational surrogacy) என்பர்.

வாடகை தாய் முறை பற்றி சட்டம் என்ன சொல்கிறது

2005 முதல் 2015 வரை இந்தியாவில் 25,000 குழந்தைகள் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளது. அதிகமாக வெளிநாட்டவர்கள் இதனை விரும்பியுள்ளனர். அதிலும் இந்திய பெண்களிடம் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதை வெளிநாட்டவர்கள் அதிகமாக விரும்பியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: பிக் பாஸ் சீசன் 6: இம்முறை 20 பேர் களமிறங்கி உள்ளனர் முழு விபரம்

சராசரியாக இதுபோல குழந்தை பெறுவதற்கு 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகிறது. வாடகை தாய்க்கு ஏற்படும் மருத்துவ செலவுகள் சிகிச்சை என அனைத்தையும் சேர்த்து இவ்வளவு தொகை ஆகிறது.

இந்தியாவில் இது மிக பிரபலமாக இருந்து வந்ததுள்ளது பெரிய வர்த்தகமாகவும் செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அதிகமாக வெளிநாட்டு தம்பதியினர், வெளிநாட்டு ஒரு பாலினத்தவர்கள் இப்படி வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெறும் முறைக்கு இந்திய பெண்களை நாடினர்.

இதனால், வெளிநாட்டவர்களுக்கு வாடகை தாயாகும் நிலையை இந்திய அரசு தடை விதித்தது.

கர்ப்பகால தாய் முறைக்கு அனுமதி 

தம்பதியரின் ஆண்ணின் விந்தணுவை மனைவியின் கருமுட்டையில் செலுத்தி கருவாக உருவாக்கப்படும். பின்னர், அந்த கருமுட்டை வேறு ஓரு வாடகை தாயின் வயிற்றில் சேர்க்கப்படும். இதைதான் கர்ப்பகால தாய் முறை என்கிறோம்.

இந்த முறையின் படி, கருவுற முடியாத பெண்கள் மட்டும் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் அனுமதி உள்ளது. கருவுற முடியாத பெண்கள் மட்டும் இதில் குழந்தை பெற்றுக்கொள்ள இப்போதும் இந்தியாவில் அனுமதி உண்டு. இது சட்டப்படி குற்றம் கிடையாது.

இம்முறையில் தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர்.

இது போன்ற தகவல்கள் மற்றும் ஜோதிடம், உடல்நலம், ஆன்மீகம், கல்வி, தமிழ் இலக்கியம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here