ஆவணி அவிட்டம் என்பது வெறும் பூணுல் பண்டிகையா?

0
23

ஆவணி அவிட்டம் என்பது வெறும் பூணுல் பண்டிகையா? இல்லை என்றால் ஆவணி அவிட்டம் என்றால் என்ன? என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் முழுவதுமாக ஆராய்வோம்.

ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பெளர்ணமி நாளை ஆவணி அவிட்ட விரத நாளாக முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்படி நாளை (11.08.2022) ஆவணி அவிட்ட விரத நாள் கொண்டாடப்படுகிறது.

ஆவணி அவிட்டம் என்றால் என்ன?

ஆவணி அவிட்டம் என்றால் பழைய பூணூலை கழற்றி புது பூணூலை மாற்றுவது மட்டும் தான் பண்டிகையாக பலரும் நினைத்திருக்கின்றனர். இது வெறும் பூணூல் மாற்றும் சடங்கு அல்ல. ஆவணி அவிட்ட நாளில் தான் நம் முன்னோர்கள் வேத கல்வியை முதன் முதலாக தொடங்குவார்கள் இந்த தினத்தை வேத கல்வி தொடங்குவதற்கு மிக உகந்த நாளாக பார்க்கப்பட்டது என சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஆவணி அவிட்டம் வேதத்திற்கு உண்டான பண்டிகை நாளாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் ஆவணி அவிட்டத்தை ‘உபாகர்மா‘ என அழைத்தனர் முன்னோர்கள். உபாகர்மா என்றால் ஆரம்பம் அதாவது வேதாரம்பம் என்று பொருள்.

ஆவணி அவிட்டம் என்பது வெறும் பூணுல் பண்டிகையா?

வேதங்களும் தோஷங்களும்:

வேதங்கள் கடவுளிடமிருந்து ரிஷிகளுக்கு கற்பிக்கப்பட்டு பின் பூவுலகில் உள்ள சகல ஜீவன்களின் நன்மைக்கும் பயன்படுகின்றன. அன்றாடம் நாம் செய்யும் பூஜைகள், ஹோமங்கள் என பல சடங்குகளில் ஓதப்படும் இந்த வேதங்களுக்கும் தோஷங்கள் உண்டாகின்றன என்று சான்றோர்கள் கூறவர்.

வேதங்களை குறிப்பிட்ட இடைவெளியின்றி சொல்லுதல், அரை குறையாக சொல்லுதல், புலப்படாதவாறு சொல்லுதல், சுறுக்கமாக சொல்லுதல், பாதியாக சொல்லுதல் இப்படி பலவாறாக வேதத்தை உச்சரிக்கும் போது தவறுகள் ஏற்படலாம். இது மிக தவறான செயலாக கருதப்படுகிறது.

குறைவுடைய வேத பாராயணங்கள் பூமியில் உள்ள எந்த ஓரு ஜீவன்களுக்கும் நன்மையை வழங்காது. மாறாக எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும். அதனால் தெரிந்தோ தெரியாமலோ வேத பாராயணத்தின்போது உண்டாகும் தோஷங்களை இந்த ஆவணி அவிட்ட நாளில் தேவர்களை அழைத்து தோஷ நிவர்த்தியாக வேத விற்பன்னர்கள் சில ஷாந்தி மந்திரங்களையும் வழிபாட்டையும் மேற்கொள்வர். இதனால் அனைவருக்கும் நன்மையும் சந்தோஷமும் உண்டாகும் என்பது ஐதிகம்.

இதையும் தெரிந்துகொள்ள: ஜாதக பொருத்தம் பார்த்தல் தமிழில்

கல்வி கற்பதற்கு முன் செய்யும் சடங்கு:

முன்னோர்களின் காலத்தில் ஒரு குழந்தை கல்வி கற்க அனுப்புவதற்கு முன்னர், அவர்களுக்கு உபவீதம் எனும் பூணூலை அணிவித்து காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்து அனுப்பும் வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அதை அணியும் வழக்கமாக மாறிவிட்டது.

ஆவணி அவிட்டம் கடைபிடிக்கும் வழிமுறைகள்:

  • ஆவணி அவிட்டத்தன்று ஆற்றுப்பகுதி அல்லது களக்கரைகளிலோ சென்று சுத்தாமாக நீராடி வந்த பிறகு அதற்குரிய சடங்குகளை தொடங்குவர்.
  • கணபதி பூஜையுடன் தொடங்கக்கூடிய இந்த விரதம், புண்யாவாகனம் செய்தை பின் பஞ்சகவயம் அருந்தி மனம், உடல், இருப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
  • கிழக்கு திசையில் வாழை இலை விரித்து அதில் அரிசி பரப்பி அதன் மீது 7 கொட்டை பாக்கு வைத்து. அதை சப்த ரிஷிகளாக நினைத்து ஆவாஹனம் செய்து தீபாராதனை செய்து நைவேத்தியம் படைக்க வேண்டும்.
  • இந்த நன்நாளில் பஞ்சபூதங்களின் வழிபாடு நன்மை அளிக்கும்.
  • திருமணமாகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும் தன்னை விட மூத்தவருக்கு பூணுலை தானமாக தரலாம்.
  • புதிய பூணுலை அணிந்த பிறகு ஓவ்வொருவரும் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தர்பணம் செய்ய வேண்டும்.
  • தந்தை இல்லாதவர்கள் தங்களின் முன்னோர்களை நினைத்து கையில் எள் கொண்டு தர்பணம் செய்வது வழக்கம்.
  • புதிய பூணூலை அணிந்து கொண்டு பழைய பூணூலை கழற்றி விட்டு வேதங்களை படிக்க துவங்கலாம்.

ஆவணி அவிட்டத்திற்கு தேவையான பொருட்கள்:

வாழை இலை ஓன்று

பச்சை அரிசி

பஞ்ச பாத்திர உத்தரணி

தாம்பூலம்

பூக்கள், பழங்கள்

வெற்றிலைப் பாக்கு

பூணூல் அணிவதால் ஏற்படும் நன்மைகள்:

ஆவணி அவிட்டம் விரதம் இருந்து அணியும் பூணூலால் தோஷங்கள் நீங்கும்.

எவ்வித தீமையோ துன்பமோ எற்படாது என்கிறது சாஸ்த்திர நூல்கள்.

எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் விலகி மறைந்து போகும் என்பது நம்பிக்கை.

பூணூல் வகைகள்:

  1. கள்ளப் பூணூல்
  2. பிரம்மச்சாரி பூணூல்
  3. கிரஹஸ்தர் பூணூல்
  4. சஷ்டிஅப்த பூர்த்தி பூணூல்

பிர்ம்மச்சாரி பூணூல், கள்ளப் பூணூல்:

ஓருவருக்கு முறையான உபநயன விழா எடுத்து பூணூல் இட்டால் அதை கழற்றக் கூடாது என்பது ஐதீகம். ஆனால், உபநயன விழா நடத்தாமல், ஆவணி அவிட்ட நாளன்று பங்கேற்று பூணூல் சாஸ்திரத்திற்காக அணிந்தால் அந்த பூணூலை கழற்றி விடலாம். இந்த பூணூலுக்கு கள்ளப் பூணூல் என்று என்பர். திருமணமாகத நபருக்கு பிரமச்சரிய பூணூல் அணிவிக்கப்படுகிறது. இந்த பிரமசாரி பூணூல், கள்ளப் பூணூலில் 3 நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். அந்த முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு எனப்படுகிறது.

கிரஹஸ்தர் பூணூல்:

திருமணம் ஆனவர் அணிந்து கொள்ளும் பூணூலுக்கு கிரஹஸ்தர் பூணூல் என்று பெயர். இதில் ஆறு நூல்கள் இணைத்து கட்டப்ட்டிருக்கும்.

சஷ்டியப்த பூர்த்தி பூணூல்:

60 வயதான ஒருவருக்கு செய்யப்படும் கல்யாணம் ஷஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி வைபவம் எனப்படும். அதேபோல 60 வயதுக்கு பின் அவருக்கு 9 நூல்கள் இணைத்து கட்டப்பட்டு அணிவிக்கப்படும். இந்த பூணூலுக்குச் சஷ்டி அப்தி பூணூல் என அழைக்கப்படுகிறது.

ஆவணி அவிட்டம் விரத நியமங்களை முறையாகக் கடைப்பிடித்து பூணூல் அணிந்து கொண்டால் அவருக்கு உபாகர்ம வினைச் செய்வது உலக நன்மைக்கு வழிவகுக்கும்.
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!
விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரம் மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. `காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. பூணூல் அணிந்து ஓவ்வொருவரும் இறைவனுக்கு காயத்திரி மந்திரம் ஜபித்தல் மிக நல்லது.
ஆன்மீகம், பண்டிகைகள், செய்திகள், ஜோதிடம் தொடர்பான தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here