தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழும் சூரியகிரகணம் அன்று என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் காணலாம்.
சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஓரே நேர்கோட்டில் வருவதை கிரகணம் என்கிறோம். அறிவியல்படி, சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது சந்திரனால் சூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் உள்ள நம் கண்களுக்கு சூரியன் தெரியாமல் போகின்றது. இதையே சூரிய கிரகணம் என்கிறோம். கிரகணம் என்றால் பற்றுவது என்று பொருளாகும். அமாவாசையன்றுதான் இந்த சூரிய கிரகணம் நிகழும்.
இந்தாண்டு 2022 ஆண்டிற்கான சூரிய கிரகணம் வருகின்ற அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அதற்கு அடுத்த நாளான 25ம் தேதி அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணம் நிகழ்கின்றது. மாலை மணி 5.14க்கு ஆரம்பித்து மாலை 5.42 மணி க்கு முடிவடைகிறது.

சூரிய கிரகணம் நிகழும் போது பின்பற்ற வேண்டியவைகள்:
1. வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.
2. அதற்கென இருக்கக்கூடிய கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கலாம்.
3. கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது.
4. கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது.
5. முடிந்தவரை குலதெய்வத்தையும் – முன்னோர்களையும் – இஷ்ட தெய்வத்தையும் வணங்குதல் நலம்.
6. 5 வயது வரை உள்ள குழந்தைகளை வெளியில் எங்கு அழைத்து செல்லுவதை தவிர்த்தல் வேண்டும்.
7.கிரகணம் முடிந்தவுடன் நீரினால் வீட்டை சுத்தம் செய்து மஞ்சள் கொண்டு வீடு முழுவதும் தண்ணீர் தெலித்தல் நன்மை.
8.கிரகணம் நிகழும் போது உணவு பாதார்த்தங்கள் மற்றும் அனைத்திலும் தர்பையை இட்டு வைப்பது நல்லது.
9.கிரகணம் முடுந்தவுடன் முதற்கட்டமாக அனைவரும் தலைக்கு தண்ணீர் ஊற்றி சுத்தமாக குளித்து விடுவது நல்லது.
கிரகணத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
சூர்ய பவகவானின் ஆதித்ய கிருதயம் சொல்வது சிறப்பு மேலும், சூர்ய பகவானே நமக என்றும் நாமத்தை ஜெபித்தல் நன்மையை தரும்.