பிரேசில் நாட்டிற்காக முதன் முறையாக கால்பந்து ஆட்டத்தில் களம் இறங்கி அந்நாட்டிற்கு முதல் உலக கோப்பையை பெற்று தந்தவர் பீலே அவரின் வாழ்வை இந்த பதிவின் மூலம் அறியலாம்.
கடந்த நூற்றாண்டின் உலக கால்பந்தின் கதாநாயகனாக இருந்தவர் பீலே இன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி, நெய்மர் என்று பல கால்பந்து கதாநாயகர்கள் இருந்தாலும் அப்போது இவர் மட்டுமே கதாநாயகனாக இருந்தவர் பிரேசிலின் உச்சபட்ச கால்பந்து உலகின் கடவுளாக பார்க்கப்பட்டவர்.
பீலேவின் பிறப்பு:
1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி, பிரேசிலில் உள்ள டிரஸ் கோரோசியஸ் எனும் நகரில் பீலே பிறந்தார்.

பீலேவின் சிறுவயது வறுமை:
தந்தை டான் டின்ஹோவும் ஓரு கால்பந்தாட்ட வீரர் தான் பிரேசில் நாட்டிற்காக பல கிளப்களில் விளையாடி உள்ளார். ஓரு சமயம் ஆடும் போது தந்தை டான் டின்ஹோவுக்கு கால் முட்டியில் தீவிர காயம் ஏற்படவே அவரது குடும்பம் வறுமையில் சிக்கியது.
அப்போது பீலே டீக் கடையில் வேலை செய்தார், வீட்டு வேலைகள் செய்து கொண்டும், ஷூ பாலிஷ் போட்டுக் கொண்டும் தனது குடும்ப வறுமையை சமாளித்து வந்துள்ளார்.
தந்தை டான் டின்ஹோவும் பீலேவும்:
தந்தையுடன் நெருக்கமாக இருந்து வந்த பீலே.1950 ஆம் ஆண்டு பிரேசில் அணியுடன் உருகுவே அணி உலக கோப்பை தொடரில் களம் கண்டது. அதில் பிரேசில் அணி தோற்றது உருகுவே அணி வெற்றியை பதிவு செய்தது. அதனை ரோடியோவில் கேட்டுக் கொண்டிருந்த பீலேவின் தந்தை பிரேசில் அணி உலக கோப்பையை பெற முடியாமல் போனதை கருதி கதரி அழுது கொண்டிருந்தார்.
அப்போது உடனிருந்த 9 வயது சிறுவனான பீலே கவலைப்படாதீர்கள் அப்பா நான் பெரியவனானதும் பிரேசில் நாட்டிற்கு உலக கோப்பையை பெற்று தருகிறேன் என்றார். இதனை பெரிதும் நினைத்து மகிழ்ந்த பீலேவின் தந்தை. தன்னை போலவே கால்பந்து வீரனாக உருவாக்க வேண்டும் என்று அவருக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வந்தார். தாயார் கால்பந்தால் தான் நாம் வறுமையுடன் இருக்கிறோம் என்று கூறி மறுத்தார். ஆனால் அவரது தந்தை பீலேவிற்கு தொடர்ந்து பயிற்சி தன்னம்பிக்கையும் கொடுத்து வந்தார்.
பீலேவின் வெற்றிகள்:
1957ம் ஆண்டு ஜூலை 7ம்தேதி மராகனா நகரில் நடந்த சர்வதேச கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக பீலே பிரேசில் அணியில் முதன்முதலாக அறிமுகமாகினார். தனது 16வயதிலேயே முதல் கோலை பீலே அடித்தார்.
1958ம் ஆண்டு நடைபெற்ற 6-வது உலகக் கோப்பையை ஸ்வீடன் நடத்தியது. இந்தத் தொடரில்தான் 17 வயதான பீலே களமிறங்கினார். இறுதிப் போட்டியில் பிரேசில், ஸ்வீடனை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்கிய ஸ்வீடன் 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது.
பிரேசில் அணியின் வாவா 9 மற்றும் 30-வது நிமிடங்களில் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார். இதன் பிறகு பீலேவின் ஆதிக்கம் தொடங்கியது. 55 மற்றும் 89-வது நிமிடங்களில் அவர் கோல் அடிக்க முடிவில் 5-2 என்ற கணக்கில் பிரேசில் வென்று உலகக் கோப்பையை முதல்முறையாக கைகளில் ஏந்தியது.
பிரேசில் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய பீலே இந்த தொடரிலிருந்து தான் பீலே கால்பந்து அணியின் நட்சத்திரமாக செயல்பட துவங்கினார். தொடர்ந்து 1958, 1962, 1970 என மூன்று ஆண்டுகளிலும் பிரேசில் உலக கோப்பை பெற பீலே மிக முக்கிய வீரராக இருந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
பீலே அடித்த கோல்களின் எண்ணிக்கை:
பீலே 1263 போட்டிகளில் விளையாடி,1,279 கோல்களை அடித்து கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். 15வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கி, 17வயதில் தேசிய அணியில் இடம் பெற்ற பீலே, 1958, 1962 மற்றும் 1970 ஆகிய உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரேசில் அணிக்காக விளையாடியுள்ளார்.
கடந்த 1958ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஓ ரீ(தி கிங்) என்ற அடைமொழியுடன் பீலே களமிறங்கினார். கிளப் அளவில் சான்டோஸ் அணிக்காக விளையாடிய பீலே 659 போட்டிகளில் 643 கோல்களை அடித்துள்ளார்.
சான்டோஸ் அணியை கேப்டனாக 1962, 1963 கோபா லிபர்டாடோரஸ், இன்டர்கான்டினன்டல் கோப்பையில் பீலே சான்டோஸ் அணியை வழிநடத்தினார். அமெரிக்காவில் கால்பந்து ஆட்டத்தை பரப்பியவர்களில் முதன்மையானவர் பீலே தனது ஓய்வுக்கு பின்னர் நியூயார்க் காஸ்மோஸ் கிளப்பிற்கு ஆடி வந்தார்.
கடந்த 1994ம் ஆண்டு யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதராக பீலே நியமிக்கப்பட்டார். கடந்த 1995ம் ஆண்டு பிரேசில் அதிபர் பெர்னான்டோ கார்டோசோ பீலேவை விளையாட்டுத்துறை அமைச்சராக நியமித்தார். 1997ம் ஆண்டு பிரிட்டன் ராணி எலிசபெத்திடம் இருந்து நைட்வுட் பட்டத்தையும் பீலே பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள்: கால்பந்து உலகின் பிதாமகன் பீலே காலாமானார்
இப்படி உலகமே போற்றும் கால்பந்தாட்டத்தின் முன்னணி வீரராக பீலே உருவாகி பல வெற்றிகளை பதிவு செய்தார். கடந்த நாட்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைகள் நடைபெற்று வந்தது தொடர்ந்து அவரது உடலில் இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் தனது 82 வயதில் இவ்உலகை விட்டி பிரிந்தார் பீலே. அவர் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் அவரின் சாதனைகள் வரும் தலைமுறையினருக்கு உந்துகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.