இரண்டாம் எலிசபெத் உபயோகப்படுத்திய கோஹினூர் வைரம் யாருக்கு செல்கிறது தெரியுமா!
வைரங்களில் பல வகைகள் உள்ளது அதில் விலை மதிக்கமுடியாத மதிப்பை பெற்றது கோஹினூர் வைரம் இது முற்றிலும் இந்தியாவிற்கு சொந்தமானது. இந்த வைரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் நாட்டினரின் படையெடுப்பின் போது அவர்களால் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணியின் கிரீடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கோஹினூர் வைரம் தொடர்பாக பலமுறை இந்திய அரசு வைரத்தை மீட்க முயற்சி செய்து தோல்வியுற்றது. இந்த வைரம் தொடர்பாக இந்தியா உட்பட நான்கு நாடுகள் சொந்தம் கொண்டாடி வருவதும் வருத்தத்திற்கு உரியது.
இந்த நிலையில் தற்போது உடல்நலக் குறைவால் ராணி எலிசபெத் காலமாகிவிட்டார். இதையடுத்து அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அடுத்து யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2800 வைரங்களை கொண்ட இந்த கிரீடத்தில் உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் மகுடமாக உள்ளது.

பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் அரசாட்சி செய்து வந்த நிலையில், அவரது மரணத்தை அடுத்து, எலிசபெத் ராணியின் மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ள்லர். எனவே, அவரது மனைவி கமீலாவிற்கு இந்த வைரம் செல்லும் என கூறப்பட்டுள்ளது. சாரலஸின் முதல் மனைவி டயானா 1996ம் ஆண்டு கார் விபத்தில் இறந்து போன நிலையில், அவர் கமீலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
கோஹீனூர் வைரம் இந்தியாவில் வெட்டப்பட்டு, பல நூற்றாண்டுகளாக ஒரு ஆளும் வம்சத்திலிருந்து மற்றொரு வம்சத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. அவர் கோஹினூர் வைரத்தை அவரது கிரீடத்தில் பதித்திருந்தார். பின்னர் அவரது மகன் திலிப் சிங்கிடம் 1839 ஆம் ஆண்டு சென்றது. 1849 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் அந்த வைரம் திருடப்பட்டு இங்கிலாந்து சென்றது.
எலிசபெத் II தனது தந்தை கிங் ஜார்ஜ் VI இன் மரணத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 6, 1952 அன்று 25 வயதில் அரியணை ஏறினார். அப்போது இந்த கிரீடம் ஜார்ஜ் VI இடம் இருந்து எலிசபத் மகாராணிக்கு மாறியது. இப்போது அவரது மருமகளுக்கு கைமாற உள்ளது.
தற்போது இரண்டாம் எலிசபெத் (96) மறைவுக்கு பின் அந்த கோஹினூர் விலை மதிப்பில்லா வைர கீரிடம் சார்லஸின் இரண்டாவது மனைவியான கமீலாவிற்கு செல்லும் என தகவல் வந்துள்ளது. இப்போது லண்டன் கோபுரத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.