Home சிறப்பு செய்திகள் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைத்தும் ‘i’ என்ற எழுத்தில் தொடங்குவது ஏன்?

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அனைத்தும் ‘i’ என்ற எழுத்தில் தொடங்குவது ஏன்?

0
5

ஆப்பிள் தயாரிப்புகள்: ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் அனைத்து பொருட்களுக்கும் மக்களிடையே பெரிய மவுசு உண்டு. உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வேண்டி விரும்பி வாங்கக் கூடிய கேட்ஜட்களில் ஒன்றாக இருக்கிறது ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள். இது மற்ற நிறுவனங்கைள காட்டிலும்  விலை அதிகமாக இருந்தாலும் அதன் செக்யூரிட்டி அம்சங்களுக்காகவே இதை வாங்குவதற்கு மக்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். ஆண்டுதோறும் ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் போதெல்லாம் அதில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இப்படி இருக்கையில் ஆப்பிள் தயாரிப்புகள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாகவோ, அந்நிறுவனத்தின் அதிகாரிகள், நிர்வாகிகள் வாயிலாகவோ தெரிய வரும். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் ‘i’ என்ற முன்னெழுத்தை வைத்து அதாவது iMac, iPhone,iPad, iPod என்று வருவதற்கான சிறப்பம்சம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

apple products

அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் iMac உருவாகியபோது உலகில் இன்டர்நெட் அறிமுகமான சமயம் அது. அப்போது கணினி பயன்பாட்டிற்கு விற்பனை புள்ளியாக இணைய சேவையே இருந்தது. அந்த சமயத்தில் இணைய சேவையின் கனெக்ட்டிவிட்டியை வேகமாக்கவும், எளிதாக்குவதற்காகவும் iMac உருவாக்கப்பட்டதாகவும், அதிலுள்ள ‘i’ என்ற எழுத்து Internet -ஐ குறிப்பிடுவதாகவும் கூறப்பட்டது.

அதே நேரத்தில் iMac ல் உள்ள ‘i’ என்ற எழுத்து internet-ஐ மட்டுமல்லாமல் individual, instruct, inspire & inform ஆகியவற்றையும் குறிக்கிறது என ஆப்பிள் நிறுவனத்தின் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார். இதனையடுத்து ஆப்பிளின் ‘i’ என்ற முதல் எழுத்தைக் கொண்ட iMac மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஆப்பிளின் மற்ற தயாரிப்புகளான iPhone, iPad, iPod மற்றும் சாப்ட்வேர்க்கும் iMovie என்று பெயரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here