கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்” புத்தக அறிமுக விழா நடைபெற்றது.
அதில் நடிகர் சத்தியராஜ் பேசுகையில், ”பெரியார் போல நடிப்பதே கஷ்டம், அவரை போல் வாழ்வது அதைவிட பெரிய கஷ்டம்” என்று கூறியுள்ளார். பெரியார் பட சூட்டிங்கின் போது அழுகிய முட்டைகளையும் தக்காளியையும் என் மீது வீசினார்கள்.அந்த வாசனை போவதற்கே 10 நாள் ஆனது. ஆனால் பெரியார் இவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு மனிதநேயத்துடன் உழைத்துள்ளார். மொழி எது வேண்டுமோ அதை படித்துக் கொள்ளலாம். ஆனால் கேரளாவில் வேலைக்கு போக எதுக்கு இந்தி படிக்கணும்.
திராவிட இயக்கம் தான் தமிழ் மொழி பற்றை தனக்குள் வைத்ததாகவும், தமிழர்களாகிய நமக்கு தமிழ் மொழி மிக முக்கியமான தான். ஆனால் ஆங்கிலத்தை நாம் அரவணைக்காவிட்டால் ஹிந்தி உள்ளே நுழைந்து விடும் என தெரிவித்துள்ளார். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் என்பதில் இருந்துதான் கடவுள் மறுப்பை பெரியார் பேசுகிறார்.

பெரிய வேலையில் இருந்தாலும் மூட நம்பிக்கைகள் பல்வேறு பெயர்களில் உள்ளே புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். மனத்திற்கு குடைச்சல் கொடுக்கும் மனவிலங்கை உடைக்கும் ஒரே ஆயுதம் பெரியார் சிந்தனைகள்தான் என சத்யராஜ் பேசியிருந்தார்.
இதில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ், சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனர் செந்தலை கௌதமன் , எழுத்தாளர் பாமரன், தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.