WOMEN IPL ACTION: இந்தாண்டு முதல் ஆடவருக்கான ஐபிஎல் தொடர் போல மகளிருக்கும் ஐபிஎல் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் நேற்று மும்பையில் மகளிருக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. இதில் முக்கிய வீராங்கனைகளுக்கு கடும் போட்டி காணப்பட்டது.
மகளிர் கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்து வரும் இந்திய பெண்கள் அணி பல நாட்களின் கோரிக்கையான ஆடவருக்கு வழங்கப்படும் சம்பளம் போன்று சமமான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் உறுதிப்படுத்தி அசத்தியது. அதுபோல மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டது.
அடுத்த மாதம் மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க 1,525 பதிவு செய்த நிலையில், இறுதி பட்டியலில் 246 இந்தியர்கள் 163 வெளிநாட்டவர்கள் என 409 மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டு தொடங்கும் போட்டிகளில் 5 அணிகள் பங்கேற்கின்றன. குஜராத் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், உத்திரப்பிரதேச வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ்.

நேற்றைய ஏலத்தில் 5 உரிமையாளர்கள் அதிகபட்சமாக 90 வீரர்களை ஏலம் எடுத்துள்ளனர். இந்தநிலையில் எந்தெந்த வீராங்கனைகள் எந்தெந்த அணியினால் எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன என்ற முழுவிவரத்தை கீழே காணலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஸ்மிருதி மந்தனா – ரூ 3.4 கோடி
சோஃபி டெவின் (NZ) – ரூ50 லட்சம்
எல்லிஸ் பெர்ரி (AUS) – ரூ. 1.7 கோடி
ரேணுகா சிங் – ரூ. 1.5 கோடி
ரிச்சா கோஷ் – ரூ. 1.9 கோடி
மும்பை இந்தியன்ஸ்
ஹர்மன்ப்ரீத் கவுர் – ரூ. 1.8 கோடி
நாட் ஸ்கிவர்-பிரண்ட் (ENG) – ரூ. 3.2 கோடி
அமெலியா கெர் (NZ) – ரூ. 1 கோடி
பூஜா வஸ்த்ரகர் – ரூ 1.9 கோடி
யாஸ்திகா பாட்டியா – ரூ 1.5 கோடி
குஜராத் ஜெயண்ட்ஸ்
ஆஸ்லே கார்ட்னர் (AUS) – ரூ. 3.2 கோடி
பெத் மூனி (AUS) – ரூ. 2 கோடி
சோபியா டன்க்லே (ENG) – ரூ. 60 லட்சம்
சினே ராணா – ரூ 75 லட்சம்
அன்னாபெல் சதர்லேண்ட் (AUS) – ரூ 70 லட்சம்
டியான்ட்ரா டாட்டின் (WI) – ரூ 60 லட்சம்
ஹர்லீன் தியோல் – ரூ 40 லட்சம்
UP வாரியர்ஸ்
சோஃபி எக்லெஸ்டோன் (ENG) – ரூ. 1.8 கோடி
தீப்தி சர்மா – ரூ. 2.6 கோடி
தஹ்லியா மெக்ராத் (AUS) – ரூ. 1.4 கோடி
ஷப்னிம் இஸ்மாயில் (SA) – ரூ. 1 கோடி
அலிசா ஹீலி (AUS) – ரூ 70 லட்சம்
அஞ்சலி சர்வானி – ரூ 55 லட்சம்
ராஜேஸ்வரி கயக்வாட் – ரூ 40 லட்சம்
ஸ்வேதா செஹ்ராவத் – ரூ 40 லட்சம்
பார்ஷவி சோப்ரா – ரூ 10 லட்சம்
எஸ் யாசஸ்ரீ – ரூ 10 லட்சம்
டெல்லி கேபிடல்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ் – ரூ. 2.2 கோடி
மெக் லானிங் (AUS) – ரூ. 1.1 கோடி
ஷஃபாலி வர்மா – ரூ. 2 கோடி
டைட்டாஸ் சாது – ரூ 25 லட்சம்
ராதா யாதவ் – ரூ 40 லட்சம்
ஷிகா பாண்டே – ரூ 60 லட்சம்
மரிசானே கப் (SA) – ரூ 1.5 கோடி
இதையும் படியுங்கள்: INDVSAUS: விராட் கோலியை முந்திய முகமது ஷமி
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.