உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி போட்டிக்கு முதல் இந்திய வீரராக கேரளவை சேர்ந்த முரளி ஸ்ரீ சங்கர் தகுதி பெற்றார்.
யூஜீனில் நேற்று முதல் தொடங்கியுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ஒலிம்பிக் தங்கமகன் ஈட்டி எறிதல் ஹீரோ நீரஜ் சோப்ரா உட்பட 22 இந்திய வீரர்கள் யூஜீன் சென்றுள்ளனர். ஜூலை 15 முதல் 24ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரரான முரளி ஸ்ரீசங்கர் ஏப்ரல் மாதம் ஃபெடரேஷன் கோப்பையின் போது தனது 8.36மீ முயற்சியுடன் சீசனின் கூட்டு இரண்டாவது இடத்தில் அமர்ந்திருப்பதால் அவர் பதக்கம் வெல்லவும் வாய்ப்பு உண்டு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் இந்தியாவின் முதல் ஆளாக இறுதி போட்டிக்கு தகுதியானார்.

8.15 மீ அல்லது இரு குழுக்களில் இருந்து 12 சிறந்த செயல்திறன் பெற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை (காலை 6:50 IST) நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.
சீசனின் டாப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பதக்கத்திற்காக சாம்பியன்ஷிப்பில் கறுப்புக் குதிரையாக நுழைந்த ஸ்ரீசங்கர், தகுதிச் சுற்றில் குரூப் பியில் இரண்டாவது இடத்தையும் ஒட்டுமொத்தமாக ஏழாவது இடத்தையும் சரியாக 8 மீட்டர் தாண்டிச் சென்றார்.