World Heart Day 2022: ஆண்டு தோறும் செப்டம்பர் 29 ம் தேதியை உலக இருதய தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் நம் உயிரின் மிக முக்கிய உருப்பாகிய இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாத்து போணுவதற்கு மக்களிடையே விழிப்புணர்வுகள் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாமும் நம் இதயத்தை எவ்வகையில் சிறப்பாக பாதுகாக்கலாம் என்பதை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.
ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும் இதயம் ஒரு நாளைக்கு லட்சம் முறை துடிக்கிறது. இதற்கு தேவையற்ற அழுத்தங்கள் கொடுக்கும்போது இதய பாதிப்புகள் சீக்கிரமே உண்டாகின்றன. நாம் அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் இதயத்தை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். மேலும், மனதை சீராக வைத்து கொள்வதன் மூலமும் இதய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.

இதயத்தை போணும் வழிகள்:
- நாம் உண்ணும் உணவில் அதிகப்படியான கீரை வகைகளை சேர்த்து கொள்வதால் எண்ணற்ற பலன்களை நாம் பெற முடியும் அதில் இதயத்தையும் பேண கீரை சிறந்த மருந்தாக இருக்கின்றது.
- வைட்டமின்களும் மினரல்களும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் இலைவடிவ காய்கறிகளில் நிறைந்திருக்கின்றன.
- உடலில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பாதாம் பெரும் அளவில் உதவுகிறது. தினமும் 40 கிராம் அளவில் பாதாமை எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நன்மையை அளிக்கிறது.
- உடலுக்கு தேவயான நல்ல சத்தை தானியங்கள் தருகிறது. தானியங்களில் காணப்படும் கார்புாஹைட்ரேட்டுடன் சேர்ந்து வைட்டமின் பி2. பி9, பி1, பி2 ஆகிய ஊட்டச்சத்துக்களும் மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்தும் கிடைக்கின்றது.
- இறைச்சி கெட்டுப் போகாமல் இருக்க மிக அதிகப்படியான உப்பு சேர்க்கப்படும். அதிக அளவிலான உப்பும் சாச்சுரேட்டட் கொழுப்பும் சேரும்போது இதய நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆகவே, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
இதையும் கவனியுங்கள்: பெண்களின் நகங்களை அலங்கரிக்கும் நகைகள்
இன்னும் மருத்துவர் தரும் இதயம் சார்ந்த விழிப்புணர்வு செய்திகளை அறிந்து இதயத்தை பேண வேறு என்ன என்ன வழிமுறைகள் என்பதை அறிந்து நாம் உண்ணும் உணவு வழியாக ஓய்வில்லாமல் இயங்கும் இதயத்தை பேணி நெடுங்காலம் நல்ல ஆரோக்கியமான வாழ்வை நாமும் நம் சங்கதிகளுக்கும் சொல்லி வாழலாம்.
இது போன்ற தகவல்களையும் மேலும், ஆன்மீகம், ஜோதிடம், தமிழ் இலக்கியம், நகைச்சுவை, விளையாட்டு, சினிமா, செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.