ஹாலிவுட்டில் ரீமேக்க செய்யப்படும் உலக நாயகன் கமலஹாசனின் ‘த்ரிஷ்யம்’ திரைப்படம்.
தென்னிந்திய படங்களில் த்ரிஷ்யம் திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பிரம்மாண்டமாக இருந்தால் மிக பெரும் வெற்றியை பெற்றது. இந்த படம் 2013 ஆம் அண்டின் மிக சிறந்த படங்களில் ஓன்றாகவும் காணப்பட்டது. இப்படத்தை மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கினார். இதில் கதாநாயகனாக மோகன்லால் நடித்து மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ் ,இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் உலக நாயகன் கமல், கெளதமி, எஸ்தர் அனில், ஆஷா சரத், நிவேதா தாமஸ், கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. ரசிகர்களின் ஆதரவால் பெரும் வெற்றி பெற்றது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நிலைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இப்படத்தின் வெற்றியை அடுத்து மலையாளத்தில் த்ரிஷ்யம் 2ம் பாகம் ஓடிடியில் வெளியாகி இதற்கும் வரவேற்பு கிடைத்த நிலையில் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது.
இந்தியில் அஜய் தேவ்கனால் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கான உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆங்கிலம் உள்பட சீன மொழி உரிமையையும் வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கொரிய, ஜப்பானிய மொழிகளின் உரிமையைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்: வாரிசு, துணிவு வெற்றியை போல கடைசி விவசாயி படமும் கொண்டாடி இருக்கனும் அ.வினோத்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.