World Menopause Day: மெனோபாஸ் நேரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்கள் பற்றியும் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். மாதவிடாய் முடிவடையும் காலம் மெனோபாஸ் எனப்படுகின்றது.
மெனோபாஸ் என்பது ஓரு பெண்ணின் மாதவிடாய் பிரச்சனைகள் நின்ற பிறகு ஏற்படும் மாற்றங்கள் ஆகும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சரியான சூழற்சி இல்லாமல் ஓரு காலக்கட்டத்தில் நின்று விடும் அப்போது பெண்கள் பலவித உடல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ‘World Menopause Day’ ஆண்டுதோறும் அக்டோபர் 18ந் தேதி அனுசரிக்கப்படுகின்றது.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருந்ததை விடவும் இந்த மெனோபாஸ் அடையும் காலத்தில் பெண்கள் தங்களை தாங்களாகவே முழுமையாக பார்த்து கொள்ள வேண்டும் என்கிறது மருத்துவ வட்டாரங்கள்.

மெனோபாஸ் நேரங்களில் ஏற்படும் மாற்றங்கள்:
- உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைய தொடங்கும் அதன் விளைவாக மாதவிடாய் நின்று போகும்.
- ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மிக குறைவாக இருப்பதால் அது ரத்த நாளங்களை பாதிக்கக் தொடங்கும். ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறையும்போது ரத்த நாளங்களில் கொழுப்பு படியத் தொடங்கும்.
- மன அழுத்தம், தூக்கமின்மை நோய்களும் இக்காலக்கட்டத்தில் தோன்றும்.
- உடலில் கொழுப்பு அதிகரிக்கவும், திசு மாஸ் குறையவும் மெனோபாஸ் காரணமாக அமைகிறது. இதனால், உடலில் அதிகப்படியான களோரிகளை எரிக்க முடியாமல், உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது.
- நீரிழிவு நோயும் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.
- பெண்ணுறுப்பின் திசுக்கள் வறட்சி அடைந்து, மெலிந்து போவதால், அதில் பாக்டீரியாக்கள் எளிதில் வளர்ந்து விடுகின்றது.
- சிறுநீரை கட்டுப்படுத்தும் தன்மை குறைந்து விடுகிறது. இதனால், திடீர், திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
- இரவில் வியர்வை அல்லது குளிர் மற்றும் தூக்கத்தில் சிரமம் ஏற்படும்.
- மூட்டு வலி மற்றும் தசை வலிகள் அதிரித்தல்.
- நினைவுத் திறன் மற்றும் சிந்தித்தலில் சிரமம் காணப்படும்.
மெனோபாஸை இயற்கையாகவே கடந்து விடலாம் ஆனால், பாதிப்பு ஏற்படும் பெண்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் மூலம் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
இந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு சவால்களும் சிக்கல்களும் பெண்களுக்கு ஏற்படும். அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகவும் இருக்கின்றது.