உலகின் முன்னனி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

0
21

உலகின் முன்னனி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார். 27 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தவர் செரினா ஓய்வு பெற்றாலும் நான் ஓய்வு எடுத்துக் கொள்ள போவதில்லை பிசியாகவே இருப்பேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நேற்று ஓய்வு பெறுவதாக முன்னரே அறிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அமெரி்ககா நியுயார்க்கில் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் ,23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் ஆகியோர் மோதினர்.

உலகின் முன்னனி டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.இதனால் அவர் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார்.இதனால் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா வில்லியம்ஸ் நிறைவு செய்தார்.அமெரிக்க ஓபனுடன் ஓய்வு பெறுவதாக செரீனா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

40 வயதான செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்த நிலையில் ஓய்வு முடிவை அறிவித்துள்ள செரீனா, ஓய்வுக்கு பின்னர் தான் குடும்பத்திற்காக நாட்களை செலவு செய்யப் போவதாகவும் கூறினார். மேலும் ஓய்வு என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது என்றும் டென்னிஸை விட்டு விலகினாலும் நான் பிசியாக தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here