உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் நத்வாரா நகரில் அமைக்கப்பட்டுள்ளது.அதனை ராஜஸ்தான் மாநில முதல்வர் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில் ‘விஸ்வாஸ் ஸ்வரூபம்’ (விஸ்வரூபம்) என்ற பெயரில் உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மலைக்குன்றின் மீது தவக்கோலத்தில் இந்த சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. மொத்தம் 369 அடி உயரமும், 16 ஏக்கர் பரப்பளவிலும் இந்த சிவன் சிலை பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
மலைக்குன்றின் மீது வானுயரத்துக்கு உள்ள இந்த விஸ்வரூப சிவன் சிலையை 20 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தே பார்க்க முடியும். மேலும், இந்த சிவன் சிலைக்கு உள்ளேயே மின் விளங்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் கூட சிலையை நம்மால் பார்க்க முடியும். சிலையை சுற்றிப் பார்ப்பதற்காக அதற்குள்ளேயே 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சிலைக்குள்ளே ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் டன் இரும்பு உருக்கு, 2.5 லட்சம் கியூபிக் டன் கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டப்பட்டிருக்கிறது. 250 ஆண்டுகள் நீடிக்கும் வகையிலும், 250 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வல்லமையுடனும் இந்த சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவன் சிலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இது மிகப் பெரும் சுற்றுலா தலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கு ஏற்ப அனைவரும் கண்டுகளிக்க ஏதுவாக கட்டப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகப் பெரிய சிவனாக இருக்கின்றது. இந்தியாவில் இந்து மதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. முழுமுதற் கடவுளர்களாக மும்மூர்த்திகள் இருந்தாலும் சிவபெருமானுக்கே நிறைய கோவில்கள் இருக்கின்றது.
வட மாநிலத்தவர்கள் பெரிதும் வணங்குவது சிவ வழிபாட்டையே அதன் காரணமாக சிவனுக்கென்று தனித்துவமான கட்டிடங்களையும் உயரமான சிவ தரிசனத்தையும் விரும்பி கட்டப்டுகின்றது.