உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் சுரஜ் வசிஷ்

0
20

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் சுரஜ் வசிஷ்.

2022 உலக கேடட்ஸ் மல்யுத்த சாம்பியன்ஷிப் (U17) இந்த ஆண்டு ரோமில் நடைபெற்று வருகிறது, ஜூலை 25 அன்று தொடங்கப்பட்டது. இப்போட்டியில் பல நாடுகளின் வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்று வருகின்றனர் இப்போட்டிகள் ஜூலை 31 அன்று வரை நடைபெறுகிறது.

1990 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ரோமில் நடந்த கிரேக்க-ரோமன் U17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமே சேர்த்துள்ளார் சுரஜ் வசித்.

32 ஆண்டுகளுக்கு முன்னர் பப்பு யாதவ் வாங்கிய தங்கப் பதக்கம் தான் இந்தியாவிற்கு கிடைத்த இறுதி தங்கப் பதக்கமாக பார்க்கப்பட்டது. அதனை முறியடித்துள்ளார். இளம் இந்திய வீரர்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் சுரஜ் வசிஷ்

16 வயதான அவர் 55 கிலோ எடைப் பிரிவில் ஐரோப்பிய சாம்பியனான அஜர்பைஜானின் ஃபரைம் முஸ்தபாயேவை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் துருக்கி 2 தங்கப் பதக்கத்துடன் முதல் இடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை பெற்றுள்ள ஈரான் 1 தங்கப் பதக்கம் 1 வெள்ளி பதக்கம் மற்றும் 2 வெண்கலம் பெற்றுள்ளது. இவ்வணிகளுக்கு அடுத்தப்படியாக 1 தங்கப் பதக்கம் 1 வெண்கலம் பெற்று இந்தியா மூன்றாவது இடைத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள ரிதால் கிராமத்தைச் சேர்ந்தவர். இப்போட்டிகளின் மூலம் தனக்கு மிகவும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

கடந்த ஆண்டு ஹங்கேரியில் நடந்த போட்டியில் ஃபிரிஸ்டைல் பிரிவில் இந்தியா சாம்பினஸ் ஆனது. கிரேக்க-ரோமன் மற்றும் பெண்கள் பிரிவில் முறையே ஜார்ஜியா மற்றும் அமெரிக்கா வெற்றி பெற்றன. இப்போட்டியில் 13 பதக்கங்களை பெற்று இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தையும், 14 பதக்கங்களை பெற்று அமெரிக்கா முதல் இடத்தையும் பெற்று இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here