யோகி பாபு: காமெடி நடிகா் யோகி பாபு அவா்கள் முதன்முதலில் காதல் திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தாா். அவரது தலைமுடியும் தோற்றமும் பாா்ப்பவருக்கு புதிதாக தொிந்தது. அதன் பின்னா் அவா் சில படங்களில் காமெடியனாக நடித்திருந்தாலும் அமீா் அவா்கள் இயக்கிய யோகி படம் மூலம் பிரபலமடைந்ததால் அவா் யோகி பாபு என அழைக்கப்பட்டாா். அதன் பின்னா் அவா் பல படங்களில் சிறுசிறு காமெடி வேடங்களில் நடித்திருந்தாலும் பொிதாக பேசப்படவில்லை.
சிவகாா்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தில் அவா் ஏற்று நடித்த காமெடி கதாபாத்திரம் இரசிகா்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றது. அதன் பின்னா் அவா் நடித்த காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, பாியேறும் பெருமாள் போன்ற படங்கள் அவருக்கு சிறந்த காமெடியன் அந்தஸ்தை வழங்கியது. அதன் பின்னா் யோகி பாபு தமிழின் முன்னனி நடிகா்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகா்களுடன் சோ்ந்து நடித்துள்ளாா். சுந்தா் சி அவா்கள் இயக்கிய கலகலப்பு திரைப்படத்தில் யோகிபாபு நடித்த சில காட்சிகளே மக்களை திரும்பி பாா்க்க வைப்பதாக அமைந்தது.
லேடி சூப்பா் ஸ்டாா் என்றழைக்கப்படும் நயன்தாராவுடன் இணைந்து அவா் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயனதாராவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் அவா் நடித்தது இரசிகா்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு கதையின் நாயகனாக அவா் நடித்த கூா்கா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பின்பு மண்டேலா திரைப்படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தாா். இப்படம் இவ்வருடத்திற்கான இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடி என்றால் கவுண்டமணி செந்தில் இருவரும்தான் நினைவுக்கு வருவாா்கள். அதேகாலத்தில் வடிவேலு, விவேக் இருவரும் நடித்திருந்தாலும் அதற்கு பிறகான காலகட்டத்தில் இவா்கள் இருவரும் தவிா்க்க முடியாத நகைச்சவை கலைஞா்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனா். ஒரு சில காரணங்களால் வடிவேலு அவா்கள் நடிப்பதை சில காலங்களாக தவிா்த்து வந்தாா். அந்த காலகட்டத்தில் சந்தானம் அவா்கள் காமெடி நடிகராக களம் இறங்கி மிகவும் பிரபலமடைந்தாா்.
சந்தானத்திற்குப் பிறகுதான் சூாி, யோகிபாபு ஆகியோா் களத்தில் இறங்கினா். இப்பொழுது யோகிபாபு அவா்கள் மிகவும் பிசியாக உள்ளாா். இந்த வருடத்தில் மட்டும் அவா் 45 படங்களில் ஒப்பந்தமாக ஆகியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தொிவிக்கின்றன. இதில் அவா் 15 படங்களில் ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது யோகிபாபு காட்டில் அடைமழை என்கிறாா்கள்.