முத்துமலை முருகன்: சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை புத்திர கவுண்டன் பாளையத்தில் முத்துமலை முருகன் கோயில் உள்ளது. இங்கு உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை உள்ளது. இதன் உயரம் 146 அடி ஆகும். இக்கோயிலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்து பக்தர்கள் ஆயிரக்கண்க்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் நாள்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தரிசனம் செய்வதற்காக முத்துமலை முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். இவருடன் காமெடி நடிகர் கணேஷ் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர். சஷ்டி நாளில் வருகை தந்த யோகி பாபுவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் கோயில் வளாகத்தை சுற்றி வந்த யோகி பாபு முத்துமலை முருகனை தரிசனம் செய்தார். இந்த போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.