காமன் வெல்த் போட்டிகள் நிறைவு விழாவில் யுவனின் பாடல் இடம் பெற்றது

0
23

காமன் வெல்த் 2022: விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல் இடம் பெற்றது.

COMMEN WEALTH GAMES 2022 இங்கிலாந்தில் பர்கிம்காம் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. பல்வேறு நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.

பத்து நாட்களாக நடைபெற்று வந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து 2வது இடத்தில் இங்கிலாந்து 3வது இடத்தில் கனடா பெற்றுள்ளது.

காமன் வெல்த் போட்டிகள் நிறைவு விழாவில் யுவனின் பாடல் இடம் பெற்றது

4வது இடத்தில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் வென்றது. இந்தியா இதுவரை பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளில் இதுவே இந்தியாவின் சிறப்பான ஆட்டம் என விளையாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், 101 பதக்கங்களை வென்று இந்தியா 2-வது இடத்தைப் பிடித்தது.

இதில், 30 பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் இருந்தும், வில்வித்தையில் 8 பதக்கங்களும், கிரேக்க – ரோமன் மல்யுத்ததில்7 பதக்கங்களும், டென்னிசில் 4 பதக்கங்களும் அடங்கும். ஆனால், 2022 காமன்வெல்த் போட்டியில் இந்த எந்த போட்டியுமே நடைபெறவில்லை.

ஆனால், இம்முறை இந்திய அணி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், ஹாக்கி என பரவலாக பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில் காமன் வெல்த் போட்டிகள் நிறைவு விழாவில் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடலுக்கு பெண்கள் ஆடினர். அவன் இவன் படத்தில் வரும் டியா டியா டோலு என்ற பாடல் இடம் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here