கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன் என்ற வாசகத்துடன் கருப்பு உடையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஆனால், மக்கள், சமூக மற்றும் மொழி ஆர்வலர்கள் எந்த ஒரு இயக்கத்திற்கும் ஆதரவாக இல்லாமல் தமிழ் நமது தாய்மொழி என்ற கொள்கையை மனதில் கொண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
இதேபோல் திரையுலக பிரபலங்களும் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, ஆஸ்கர் விழாவில் தமிழில் பேசி விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது “Dark Dravidian, Proud Tamizhan” அதாவது ‘கருப்பு திராவிடன், பெருமை வாய்ந்த தமிழன்’ என்று குறிப்பிட யுவன் ஷங்கர் ராஜா கருப்பு உடையில் கடற்கரையில் நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, 2020ம் ஆண்டு ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடந்த கருத்தரங்கில், ‘இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம்‘ என, அமைச்சக செயலாளரே கூறியிருந்தார். அப்போதும் இசையமைப்பாளர் YSR, மெட்ரோ பட ஹீரோ சிரிஷும் “எனக்கு இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன்” போன்ற வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் அணிந்திருந்தனர்.
இதையடுத்து பலர் அதே வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.