சினிமாவில் 26 வருடம் நிறைவு செய்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

0
16

யுவன்சங்கர் ராஜா: 1997ம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘துள்ளுவதோ இளமை’, ‘மெளனம் பேசியதே’, ‘காதல் கொண்டேன்’, ‘மன்மதன்’, ‘தீனா’, ‘பில்லா’ உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இடையில் சில காலம் அவர் சில  படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தார். சமீபத்தில் ‘வலிமை’, ‘லவ்டுடே’ படங்களுக்கு இசையமைத்திருந்தார். அதுவும் 2கே கிட்ஸின் விருப்ப படமாக கொண்டாடப்பட்ட ‘லவ்டுடே’ படத்தின் அனைத்து பாடல்களும் 2கே கிட்ஸ் கொண்டாடும் விதமாக அமைந்தது.

yuvan shankar raja complete his 26 years music journey in tamil industry

இந்நிலையில் சமீபத்தில் தனது 26 வருடத்தை சினிமா துறையில் நிறைவு செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது பற்றி யுவன் சங்கர் ராஜா கூறும்போது, ‘நீங்கள் அனுப்பிய வாழ்த்து வீடியோ, கடிதங்கள், மெசேஜ்கள் அனைத்துக்கும் நன்றி. இந்த ஆண்டில் அதிக படங்களில் பணியாற்றி உங்களை மகிழ்விப்பேன்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here