பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வென்றது ஜிம்பாபே அணி

0
7

பலம் வாய்ந்த பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டுகளை ஆரம்பம் முதலே எடுத்து பாகிஸ்தான் அணியினரை வென்று அசத்தியுள்ளது ஜிம்பாபே அணி.

இந்தாண்டுக்கான T20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகின்றது. பத்து அணிகள் இடம் பெற்றுள்ள இப்போட்டியில் சூப்பர் 12 சுற்றுக்கு செல்ல குரூப் A மற்றும் குரூப் B அணியினரிடையே போட்டிகள் நிலவி வருகின்றது. அனைவரும் எதிர்பார்த்து இருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் கடந்த ஞாயிற்று கிழமை அன்று நடைபெற்றது.

பரப்பரப்புக்கு பஞ்சம் இல்லாத அந்த போட்டியில் கடைசி வரை யார் வெல்வார் என்ற பதட்டம் காணப்பட்டது உண்மையே அந்த போட்டியில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு எடுத்து செல்ல உதவியவர் கிங் கோலி தான். அவரின் திறமையான அதிரடியான ஆட்டத்தால் கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் என்ற நிலையை கடந்து இந்தியாவிற்கு வெற்றியை உறுதியாக்கினார்.

பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வென்றது ஜிம்பாபே அணி

அடுத்ததாக நடைபெற்ற இந்தியா நெதர்லாந்து உடனான போட்டிகளிலும் கோலியின் திறமையான ஆட்டத்தாலும் சூர்யாகுமாரின் அதிரடியாலும் ரோஹூத்தின் அரைசதத்தாலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு இக்கட்டான சூழல் நிலவி வருகின்றது. அடுத்தடுத்த போட்டிகளில் வென்றாக வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டது. நேற்று நடந்த பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாபே உடனான போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மேலும், அந்த அணிக்கு இக்கட்டான சூழல் நிலவி வருகின்றது. சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில் விளையாடிய ஜிம்பாபே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் 4 விக்கெட்டுகளை நவாஸ் எடுத்திருந்தார். கான் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இந்த எளிமையான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்து வந்தனர்.பாகிஸ்தான் வீரர்களில் அதிகபட்சமாக மசூட் 44 ரன்களையும், நவாஸ் 22 ரன்களையும் எடுத்திருந்தனர்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. வெற்றிக்கு தேவையான 1 ரன் எடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. ஜிம்பாபே அணியின் பவுலர் ராசா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 4 ஓவர் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here